09th December 2021 23:40:51 Hours
ராஜகிரியவில் உள்ள கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 16 மார்ச் 2020 அன்று முதல் பணிகளை ஆரம்பித்து 1 ஒரு வருடம் ஒன்பது மாத காலமாக பாதுகாப்புத் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில், நோய்த்தடுப்பு, கட்டுப்பாடு, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்த்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
தற்போது கொவிட்-19 தடுப்புச் செயற்பாடுகளின் இறுதி கட்டத்தை அறிவிக்கும் வகையில், கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (8) பிற்பகல் செயலணியின் இறுதி அமர்வில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் நேரடியாகவும் வீடியோ தொழில்நுட்பம் மூலமும் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததோடு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அவர்களும் கலந்துகொண்டார்.
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் இலங்கை அராசாங்கத்தின் தலைமையிலான ஒரு குழுவின் உறுப்பினர்களாக எமது நாட்டில் சுமார் 2 வருடங்களாக தொற்றுநோயை கட்டுப்படுத்த அயராது உழைத்து வருகிறோம். இக்காலகட்டத்தில கொரோனா அலைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இந்த தருணத்தில் நாட்டின் முதற் பிரஜை அவர்களினால் கண்ணுக்கு தெரியாத எதிரியோடு போராடி பாதுகாப்பை வழங்கும் மகத்தான பணி செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டது. நோய் கட்டுப்பாட்டிற்காக பல உபாயங்களை வகுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயற்படுத்தும் பணிகளை செயலணியின் நிபுணர் குழுவினர் முன்னெடுத்து வந்தனர். அதனால் தொற்றுநோய் அச்சுறுத்தல் உக்கிரமடைந்த தருணங்களிலும் பெரும் நெருக்கடிகளை அனுபவிக்கும் அளவான சூழ்நிலை நாட்டில் உருவாவதற்கு நாம் இடமளித்திருக்கவில்லை.
"இந்தக் குழுவால் முன்மொழியப்பட்ட உபாயங்கள் மற்றும் வழிமுறைகள் நோயாளிகளை முகாமைத்துவம் செய்வதற்கு பயனுள்ளதாகவும்,தொடர்பாடல் வழிமுறைகளை சீரமைத்தல், தனிமைப்படுத்தல் மற்றும் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கள் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்திருப்பதோடு, சுகாதார அமைச்சு மற்றும் அதன் ஊழியர்கள் தொற்றுநோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மேற்படி செயற்பாடுகள் உதவியாக அமைந்திருக்கும். அதேபோல் 2022 ஆம் ஆண்டில் கொவிட் இல்லாத இலங்கையை உருவாக்கவும் உதவியாக அமைந்திருக்கும்.
இந்நிலையில் இன்று முதல் இந்த செயல்பாட்டு மையம் மற்றுமொரு மகத்தான பணியை ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி 1906 மற்றும் 1940 அவசர அழைப்புச் சேவைகளை முன்னெடுப்பும் மையதாக சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும். எவ்வாறாயினும் இதுவரையில் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் இதுவரையான செயற்பாடுகள் ஆவணமாக தொகுக்கப்பட்டுள்ளதோடு அந்த பதிப்பு இன்னும் இரு தினங்களில் வெளியிடப்படும்.
"தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் என்ற வகையில், குழுவின் உறுப்பினர்கள், சுயாதீன நிபுணர் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு செயலணி உறுப்பினர்கள் மற்றும் வைத்தியர் மற்றும் முன் பயிற்சி வைத்தியர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் கொள்கிறேன். இந்த மகத்தான தேசத்திற்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குவதற்காக கொவிட் – 19 தடுப்பு செயலணியில் பணியாற்றியவர்கள். தொழில் வல்லுநர்கள், புத்திஜீவிகள், அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள், தனிநபர்கள் குழுக்கள் பல வழிகளிலும் எங்களுக்கு உதவ முன்வந்தனர். அவர்கள் அனைவருக்கும் அவர்களின் பங்களிப்புகளுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இறுதியாக, அனைத்து மட்டங்களிலும் உள்ள வைத்திய மற்றும் மற்றும் பொது சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், புலனாய்வு பிரிவினர், ஆகியோரின் பங்களிப்பையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். மற்றும் இந்த தேசத்தின் மக்கள் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்திற்கு, ”என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.