08th December 2021 17:22:19 Hours
இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு நவ ரட்டக்' திட்டத்திற்கு அமைவாக , இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையக வளாகத்தில் நீர்கொழும்பு லயன்ஸ் கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு நிகராக, 100 TJ (அல்போன்சு) மாங்கன்றுகளை நாட்டி வைக்கும் வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (3) 58 வது படைப் பிரிவு தலைமையக வளாகத்திள் அப்படைப்பிரிவு படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
58 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்திட்டத்தில் கேணல் பொதுப்பணி கேணல் ஜூட் காரியகரவன, பணிநிலை அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.