Header

Sri Lanka Army

Defender of the Nation

09th December 2021 13:00:31 Hours

ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் நீத்த இந்திய இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இராணுவ தளபதியின் இறங்கள் செய்தி

தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தின் குனூர் பிரதேசத்தின் ஊடாக இன்று (08) மாலை பணயித்துகொண்டிருந்த வேளையில் ஹெலிகொப்டரில் பயணித்துகொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்திய இராணுவ பதவி நிலை பிரதானி பிபின் ராவட் மற்றும் அவரது பாரியார் திருமதி மதுலிகா ராவட் மற்றும் சிலர் உயிர்நீத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை இராணுவத்தின் நீண்டகால உண்மையான தோழரான இந்திய இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவட் அவர்கள் 2018 ஆம் ஆண்டில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். குறித்த விஜயத்தின் போது, இலங்கை இராணுவத்திற்காக சமிஞ்ஞை ஆய்வுகூடமொன்றை திறந்துவைத்த அவர் இலங்கைக்கு இராணுவ பயிற்சிகளை வழங்குவதற்காக புதிய பயிற்சி திட்டங்கள் பலவற்றையும் அறிமுகப்படுத்தியிருந்தர். அதனால் இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்த வழி செய்திருந்த அவர் “இராணுவத்திடமிருந்து இராணுவத்திற்கு” ஒத்துழைப்பு திட்டத்தை ஆரம்பித்து இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்களின் அடையாளமாக பல வருடங்களாக விளங்கும் இந்திய இராணுவ பதவி நிலை பிரதானி ஜெனரல் பிபின் ராவட் மற்றும் அவரது பாரியாருக்கு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று மாலை இறங்கள் செய்தியை வெளியிட்டுள்ளார்.

நான் பதவிக்காக தெரிவானதை தொடர்ந்து ஜெனரல் பிபின் ராவட் அவர்கள் தொடர்ச்சியாக என்னுடன் தொலைபேசியூடாக தொடர்பில் இருந்ததோடு, இந்திய இராணுவ பதவி நிலை பிரதானியாக ஜெனரல் பிபின் ராவட் பதவியாற்றிய காலப்பகுதியில் தேராதூன் இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக அந்த பயணத்தை கால வரையரையின்றி ஒத்திவைக்க நேரிட்டது. அதேபோல் கொழும்பு - புத்தகாயாவுக்கான நேரடி விமானச் சேவையூடாக இலங்கை இராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு யாத்திரைக்கான திட்டமொன்றை ஆரம்பித்தவர் ஜெனரல் பிபின் ராவட் என்பதையும் ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இராணுவ தெரிவு, தலைமைத்துவம், தூரநோக்கு மற்றும் நற்புறவுடன் சேவையாற்றுவது அவருடைய பண்புகளாகும். தொழிசார்ந்த புதியதொரு யுகத்தை தோற்றுவிப்பதற்கும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்ற சூழ்நிலைக்கு மத்தியிலும் எழுகின்ற பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்திருந்த அதேவேளையில் அவருக்கு கீழ் பணியாற்றும் படையினருக்கும் ஊக்குவிப்பையும் வழங்கியிருந்தார். இந்திய இராணுவத்தின் முதலாவது பதவி நிலை பிரதானியான பிபின் ராவட் அவர்கள் இராணுவ துறைசார் நிபுணராக வரலாற்றில் மறக்க முடியாத நினைவுகளை பதிவு செய்துள்ள அவர் அண்மைய நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அர்பணிப்புடன் செயற்பட்டவர்.

சோகமிக்க மிக்க இந்த தருணத்தில் அவசர விபத்தில் உயிர் நீத்த இந்திய இராணுவ பதவி நிலை பிரதானி பிபின் ராவட் மற்றும் அவரது பாரியார் மதுலிகா ராவட் உட்பட அனைத்து இந்திய இராணுவ வீரர்களுக்கும் இலங்கை பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் அனைத்து இராணுவ வீரர்கள் சார்பிலும் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன். (நிறைவு)