08th December 2021 10:47:41 Hours
புனித கதிர்காமம் தேவாலயம் மற்றும் அதன் பஸ்நாயக்க நிலமே அவர்களினாலும் வழங்கப்பட்ட நிதி உதவியின் மூலம், கதிர்காமம் வெடசிட்டி கந்த தொம்பே வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த அநாதரவான குடும்பமொன்றிற்கு புதிய வீடொன்று நிர்மாணித்துகொடுக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 122 வது பிரிக்கேடின் கீழ் உள்ள 23 வது கஜபா படையணியின் சிப்பாய்களால் திருமதி சுஜித் பிரசங்கவின் என்பவனரின் அநாதரவான குடும்பத்திற்காக இந்த புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்ததோடு, 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களினால் நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் போது வீட்டின் பெயர் பலகை திறைநீக்கம் செய்யப்பட்டு பயனாளிக் குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நன்கொடையாளர்கள், 122 வது பிரிகேட் தளபதி, சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நிகழ்வில் கலந்து கொண்டனர்.