06th December 2021 16:58:07 Hours
புத்தளத்திலுள்ள 58 வது படைப்பிரிவு தலைமையகத்தின் பட்டாலியன் பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் மீட்டல் பாடநெறியானது உயர் பயிற்சிப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர்களின் பங்கேற்புடன், புதன்கிழமை (1) ஆரம்பமானது.
19 நாட்கள் இடம்பெற்ற பாடநெறியானது பயிற்சியாளர்-பயிற்சி முறையை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு, இதில் 03 அதிகாரிகளும் 47 சிப்பாய்களும் கலந்துகொண்டனர். இப் பாடநெறி 23 டிசம்பர் 2021 அன்று நிறைவடையவுள்ளது.
முதலாம் படையணியின் தளபதியவர்களின் வழிகாட்டலுக்கமைய 58 வது படைபிரிவு தளபதியின் மேற்பார்வையில் சிறப்பு பயிற்றுனர்களை உருவாக்கும் வகையில் மேற்படி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 58 வது படைப்பிரிவு தளபதி சார்பாக பங்கேற்றிருந்த 583 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜே.எம்.எஸ்.ஜி.பி ஜயமஹா அவர்களினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.