Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2021 14:52:15 Hours

இராணுவத்தினரால் கெவிலியமடு பிரதேசத்தில் உலர் உணவு பொதிகள் விநியோகம்

மட்டக்களப்பு மாவட்ட அருட்தந்தை ஜேசுதாசன் அவர்கள் வழங்கிய நிதியுதவியால் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எம்.என்.கே.டி பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் 2021 நவம்பர் 28 ஆம் திகதி கெவிலியமடு பகுதியில் உள்ள 30 வறிய குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் ரூபா 4000/= பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மிகவும் வறுமையில் வாடும் கெவிலியமடு பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் நிலைமையை கருத்திற் கொண்டு 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டில் அரிசி, பருப்பு, நெத்திலி, மசாலா, பொதி செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை உள்ளடக்கிய நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

நன்கொடையாளர், அருட்தந்தை ஜேசுதாசன், 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்.டபில்யு.எம் உதயகுமார, 11 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் ஆகியோர் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இத் திட்டத்தில் இணைந்து கொண்டனர்.