Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2021 14:58:07 Hours

யாழ் குடா நாட்டில் கொவிட்-19 நோய் பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் யாழ் குடாநாட்டில் கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராக பணியில் ஈடுபட்ட வைத்திய அதிகாரிகள் ,பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ மாதுக்களின் அர்பணிப்புக்களை பாராட்டி கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு காங்கேசன்துறை தல்செவன விடுமுறை விடுதியில் சனிக்கிழமை (4) ஆம் திகதி இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் 29 வைத்திய அதிகாரிகள் 86 பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 210 மருத்துவ மாதுக்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியும் யாழ் மாவட்ட கொவிட்-19 கட்டுப்பாடு இணைப்பாளருமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் கலந்து கொண்டதுடன் யாழ் மாவட்டச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன், யாழ் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. கேதீஸ்வரன், பிராந்திய தொற்றுநோய் கட்டுப்பாட்டாளர் வைத்தியர். பி. பரணீதரன், யாழ் போதன வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, மனநல மற்றும் சிறுவர் சுகாதார மற்றும் பாடசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். நித்தியானந்த, சுற்றுச் சூழல் மற்றும் தொழில்சார் சுகாதார அதிகாரியுமான வைத்தியர் நிக்சன் கமலராஜன், 51 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தளபதி மேஜர் ஜெனரல் வந்தித மகிந்த உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில், யாழ் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு பெருமளவு பங்களிப்புகளை வழங்கிவரும் நன்கொடையாளரும் ‘தியாகி அறக்கட்டளையின்’ தலைவருமான திரு.வி.தியாகேந்திரன் அவர்களும் இதே நிகழ்வில் பாராட்டப்பட்டார். அவர் சார்பாக அவரது மகள் மற்றும் திருமதி தியாகேந்திரன் ஆகியோர் நினைவுப் பரிசை ஏற்றுக்கொண்டனர்.

தங்கள் உயிருக்கு பல ஆபத்து இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, சரியான நேரத்தில் தங்கள் தடுப்பு, நிர்வாகம் மற்றும் சிகிச்சை பணிகளைச் செய்ய முன்வந்த முன்னணி சுகாதார துறையினரை பிரதிபளிக்கும் வகையிலான பல கலாச்சார மற்றும் நடனக் காட்சிகள் இடம் பெற்றதுடன், ஊரடங்கு சட்டம் மற்றும் தேவையான நேரத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைகள் தொடர்பாக இந்த நிகழ்வில் எடுத்துக்காட்டப்பட்டது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ் பாதுகாப்பு படைத் தளபதியும் யாழ் கொவிட்-19 கட்டுப்பாடு செயற்பாடுகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களினால் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந் நிகழ்வு இடம் பெற்றது.