07th December 2021 10:51:06 Hours
அதிமேதகு ஜனாதிபதியவர்களால் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய இலங்கை இராணுவத்தின் 59வது பதவி நிலை பிரதானி நியமனம் இன்று (07) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாயக நியமனம் வகித்திருந்ததோடு, இராணுவத்தின் 58 வது பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.