Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2021 14:00:44 Hours

லயன்ஸ் கழகம் இலங்கை இராணுவ தொண்டர் படையணியுடன் இணைந்து மரக்கன்றுகள் பகிர்ந்தளிப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் 'துரு மிதுரு-நவ ரடக்' திட்டத்திற்கு அமைவாக, இலங்கை இராணுவத் தொண்டர் படையின் படையினர் கொஸ்கமவில் ஒரு மாபெரும் மரம் நடும் மற்றும் மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.

இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெள்ளிக்கிழமை (3) இவ் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்கவின் ஒருங்கிணைப்பின் கீழ் லயன்ஸ் கழகம் 306 சி 2 இன் 'ஹுஸ்மக் சிடவமு’ (மூச்சுக்காய் நாட்டுவோம்) திட்டத்தின் 3 ஆம் கட்டத்தின் கீழ் இவ் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் ஊனமுற்ற போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக நிதி திரட்டும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் லயன்ஸ் கழக 306/A2 இன் மாவட்டத்தின் தலைவர் சிங்க புத்திக ரத்நாயக்க மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. நளின் குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.மா, பலா, மருதை, அல்போன்சு என சுமார் 1000 வகையான கன்றுகள் இவ் நிகழ்வின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டன.

திரு.சிங்க புத்திக ரத்நாயக்க அவர்கள் மற்றைய தொண்டர் படையணி படையலகுகளுக்கு மரக்கன்றுகளை விநியோகித்ததன் அடையாளமாக அல்போன்சா மாங்கன்றுகளை இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தளபதிக்கு அன்பளிப்பு செய்தார்.

மரக்கன்றுகள் விநியோகத்திற்கு இணையாக லயன்ஸ் கழகத்தினால் இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையகத்தின் பாவனைக்காக கணினிகள், எழுதுபொருட்கள் மற்றும் ஏனைய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். லயன்ஸ் கழகம் 306/A2 மாவட்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையகத்தின் கேணல் வழங்கல் (நிர்வாகம்) கேணல் நளிந்தர மகாவிதான அவர்களால் மரக்கன்று பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.