Header

Sri Lanka Army

Defender of the Nation

07th December 2021 13:10:05 Hours

ஓய்வுபெற்று செல்லும் பதவி நிலை பிரதானிக்கு இராணுவத் தளபதியின் வாழ்த்துக்கள்

இராணுவத்தின் 58 வது பதவி நிலை பிரதானியும், கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் 35 வருட அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் முன் வியாழக்கிழமை (2) காலை இராணுவத் தளபதி அலுவலகத்தில் இராணுவ தளபதியின் அழைப்பின் பேரில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் உத்தியோக பூர்வமாக இராணுவத் தளபதியை சந்தி்தார்.

இந்த சந்திப்பின் போது பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள், மனிதபிமான நடவடிக்கைகளின் போது மற்றும் யுத்ததின் பின்னர் புலிகளின் முற்றுகையின் கீழ் இருந்த நாடும் மக்களும் பாதுகாக்கப்பட்டதுடன் சிறந்த நலன்களுக்காக எவ்வாறு பணியாற்றினர் என்பதை மையப்படுத்தியதுடன் அதேவேளை அவர்களின் இராணுவ வாழ்க்கையின் போது மகிழ்ச்சியையும் குறிப்பிடத்தக்க நினைவுகளையும் பரிமாறிக் கொண்டனர்.

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரியின் அஞ்சாத பங்களிப்பையும் கெமுனு ஹேவா படையணியி்ன் வளர்ச்சிக்கான பங்களிப்பையும் இராணுவத் தளபதி நன்றியுடன் பாராட்டினார்.

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 25 வது யாழ். பாதுகாப்புப் படைத் தளபதியாக கடமையாற்றிய போது இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசின் பேரில் 2021 ஜூலை 17 அன்று 58 வது இராணுவ பதவி நிலை பிரதானியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். ஜெனரல் ஷவேந்திர சில்வா 35 வருடங்களுக்கும் மேலாக முன்மாதிரியான சேவை மற்றும் அர்ப்பணிப்புடன் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவரது எதிர்கால முயற்சிகள் மற்றும் அவரது மாற்று திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கேட்டறிந்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி ஒரு உண்மையான மண்ணின் மகனாக எப்படி நாட்டிற்காக உழைத்தார் என்பதை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினார்.

"தேசத்திற்கான உங்கள் அயராத சேவையில் இராணுவ அமைப்பின் கனிஷ்ட அதிகாரிகளுக்கு ஒரு உத்வேகமாகவும் காலாட் படை அதிகாரியாக ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் எந்த சவாலையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும். நீங்கள் எப்பொழுதும் உங்களால் இயன்ற அறிவுரைகளை நிறைவேற்றியுள்ளீர்கள், அதே நேரத்தில் இராணுவ அமைப்பின் நற்பெயரையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாத்து வருவதை நான் நன்றாக நினைவில் வைத்திருக்கின்றேன் என ஜெனரல் ஷவேந்திர சில்வா கருத்து தெரிவித்தார்.

பதிலுக்கு மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இராணுவத் தளபதிக்கு தனது பணிக்காலம் முழுவதிலும் குறிப்பாக கடந்த 1 - 2 வருடங்களில் வழங்கப்பட்ட ஆதரவு வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்களுக்கான நன்றினை தெரிவித்தார். அத்துடன் இராணுவத் தளபதியின் அக்கறை மற்றும் சிந்தனைகளுக்கும் அமைப்பின் முன்னோக்கி பயணத்திற்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த உரையாடலின் இறுதி நிகழ்வாக இராணுவ தளபதியினால் பதவி விலகும் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவிற்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றையும் குடும்பத்தினருக்கு மற்றுமொரு பரிசையும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இராணுவ பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். யாழ்-பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக ஏழு மாதங்களுக்கும் மேலாக அவர் கடமையாற்றிய போது பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் நல்லிணக்கத்தை மேலும் மேம்படுத்துவதற்கு அயராது உழைத்தார். புதிய வீடுகள் நிர்மாணித்தல், அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், கொவிட்-19 தொற்றுநோய் தடுப்புத் திட்டத்தைத் தொடங்குதல் மற்றும் பல சிவில்-இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்கள், அத்துடன் தகுதியான பொதுமக்களுக்கான பல நலத் திட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்கினார்.

அவர் 59 வது படைப்பிரிவின் தளபதியாகவும், 51 வது படைப்ெபிரிவு தளபதியாகவும், 513 வது பிரிகேட் தளபதியாகவும், 144 பிரிகேட் தளபதியாகவும், ஸ்ரீ ஜயவர்தனபுர புதிய பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாகவும், இன்னும் சில அலுவலகங்களில் பணிநிலை அதிகாரியாவும் பணியாற்றினார். அவர் சில காலம் இலங்கை இராணுவ மகளிர் படையின் படைத் தளபதியாகவும் இருந்தார்.

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, போரின் பலமான போராளியாக, வன்னியில் அமைதிக்கான மனிதாபிமான நடவடிக்கையில் உச்சக்கட்டப் பணியில் தீவிரமாகப் பங்களித்தார். மாங்குளம், ஒலுமடு, அம்பகாமம், உடையார்கட்டுக்குளம் ஆகிய புலிகளின் முக்கிய கோட்டைகளைக் கைப்பற்றிய அவரது படையினர் 593 வது பிரிகேட் மற்றும் 631 வது பிரிகேட் ஆகியவற்றிக்கு கட்டளையிட்ட போது புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் வளாகத்தையும் அழித்துள்ளனர். மே 2009 இல் மனிதாபிமான நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் 533 வது பிரிகேட்டின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் அவர் பெரும்பாலும் அதிக தீவிர செயல்பாட்டு சூழல்களிலும் அச்சுறுத்தப்பட்ட பகுதிகளிலும் பணியாற்றினார். 5 வது கெமுனு ஹேவா படையணியின் குழு தலைவராக வடமராட்சி நடவடிக்கையில் பங்கேற்று பின்னர் திருகோணமலைப் பகுதியில் பணியாற்றினார். ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்திலிருந்து தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக ஆபரேஷன் பலவேகய மற்றும் ஆபரேஷன் ‘அகுனுபஹார’ ஆகியவற்றில் அவர் பெரும் அர்ப்பணிப்பைச் செய்தார். 7 வது கெமுனு ஹேவா படையணியின் அணி கட்டளை அதிகாரியாக மன்னார் சிலாவத்துறையில் உள்ள கடற்புலிகள் தளத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட முதலாவது வான் வழி தாக்குதல் நடவடிக்கையில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். போர்க்களத்தில் நிபுணத்துவம் பெற்ற அவர், யாழ். நகரத்தை விடுவிப்பதில் ‘’ரிவிரெச’’ நடவடிக்கையின் போது முக்கிய பங்காற்றினார். மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 2000 ஆம் ஆண்டு 9 வது கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரியாக நியமனம் பெற்ற போது ஆனையிறவில் ஏற்பட்ட அழிவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் பங்களித்தார்.

கொமாண்டோ பிரிகேட்டின் கீழ் உள்ள 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியாக 2007 ஆம் ஆண்டு தொப்பிகலவை விடுவிப்பதில் அவர் தீவிர பங்காற்றினார். அதுமட்டுமல்லாமல், 593 வது பிரிகேட் அவரது கட்டளையின் கீழ் பல புலிகளின் கோட்டைகளை கைப்பற்றுவதற்கு ஆதரவளித்தது. முல்லைத்தீவுப் பகுதியைப் படையினர் கைப்பற்றுவதற்கும் அதைத் தக்கவைப்பதற்கும் வழி வகுக்கும் தனது சொந்த முயற்சிகளைப் பயன்படுத்தி பல பயங்கரவாதிகளின் மண் அரண்களை தகர்த்தார்.

அவர் உள்நாட்டு வெளிநாட்டு பாடநெறிகளில் பங்கு பற்றி இராணுவ அறிவினை மேம்படுத்தியுள்ளார். இந்தியா மோவ் காலாட் படை பயிற்சி பாடசாலையில் கனிஷ்ட கட்டளை அதிகாரி பாடநெறியும், இந்தியா வெரைகேட் இராணுவ பயிற்சி பாடசாலையில் எதிர் கிளர்ச்சி மற்றும் எதிர்ப்பு கிளர்ச்சியில் வன யுத்த பாடநெறியையும் இந்தியா மோவ் இராணுவப் போர்க் கல்லூரியில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறியையும் ஐக்கிய அமெரிக்காவில் பயங்கரவாத பாதுகாப்பு தொடர்பான பாடநெறியையும் சீனா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மூலோபாய பயிற்சி பாடநெறியையும் கற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

அதேபோன்று முதுகலை மூலோபாய முகாமைத்துவம் மற்றும் இராணுவ விஞ்ஞானம் - சீனா, மனித வள முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் - கொழும்பு பல்கலைக்கழகம், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தினால் (BIDTI) இலங்கை கடற்படை, வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட - சர்வதேச துறைமுகங்கள் இராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகளில் டிப்ளோமா , அமெரிக்கா பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய பசிபிக் மையத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான விரிவான பாதுகாப்பு பதிலளிப்பு பட்டம் பெற்றவர்., இந்தியாவில் சிரேஸ்ட பாதுகாப்பு முகாமை டிப்ளோமா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமை மற்றும் நிர்வாக டிப்ளோமா பெற்றுள்ளார்.

கொழும்பு 05 இசிபதன கல்லூரியின் பெருமைமிக்க மாணவரான இவர், 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் நிரந்தர ஆட்சேர்ப்புக்கான பயிலிளவல் அதிகாரி கபடநெறி இல. 24 இணைந்தார். கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி மற்றும் இலங்கை இராணுவக் கல்லூரியில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர் அதிகாரிகளின் , பாகிஸ்தான் மங்களா அதிகாரிகள் பயிற்சிப் பாடசாலையின் அதிகாரி பயிற்சி படிப்பைப் பயில்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் குவெட்டா காலாட்படை பயிற்சி பாடசாலையில் அதிகாரிகள் ஆயுதங்கள் மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் பாடநெறியை கற்றுள்ளார். அவர் 18 மே மாதம் 1987 இல் 4 வது கெமுனு ஹேவா படையணியின் 2 வது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.