01st December 2021 12:27:58 Hours
படையணிகளுக்கிடையிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் 2021 இறுதிப் போட்டிகள் (3x3) நவம்பர் மாதம் 28 முதல் 30 வரை பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.
இலங்கை இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவரும் இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்டக் குழுவின் தலைமை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த ஆண்டு சாம்பியன்ஷிப்பிற்காக, இராணுவத்தின் 15 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 அணிகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன, மேலும் இந்தப் போட்டியானது இராணுவம் மற்றும் தேசிய கூடைப்பந்தாட்டக் குழுவிற்கு சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்திருந்தது. இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்டக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வருடத்திற்கான சம்பியன்ஷிப் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் வீரர்களால் கைப்பற்றப்பட்டது. 2 ஆம் இடத்தை இலங்கை சமிக்ஞைப் படையும், 3 ஆம் இடத்தை இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வீரர்களும் பெற்றுக்கொண்டனர்.
இறுதிப் போட்டியின் பின்னர் பிரதம விருந்தினர் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சிரேஷ்ட அதிகாரிகளால் வெற்றியாளர்களுக்கு பரிசுகள், கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய நடைபெற்ற விருது வழங்கும் விழா நன்றியுரையுடன் நிறைவுப்பெற்றது.
இறுதி நிகழ்வில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் இராணுவ தொண்டர் படையின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.