01st December 2021 16:00:30 Hours
கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் சந்தன அரங்கல்ல அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகியிருந்த கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு கூட்டம் திங்கட்கிழமை (29) சுமார் மூன்று மணித்தியாலங்களாக நடைபெற்றிருந்தது.
இத் திட்டமானது கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனரத் யாபா அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் சந்தன அரங்கல்ல மற்றும் கொழும்பு மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வி பீடத்தின் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்க ஆகியோரால் நடத்தப்பட்ட இந்த அமர்வில், தடுப்பூசி கண்காணிப்பு முறையின் மூலோபாய நிலை மற்றும் தனிமைபடுத்தல் மையம்/ இடை நிலை பராமரிப்பு மையத்தின் கண்காணிப்பு முறைமை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சில முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்ததுடன் சுகாதார மற்றும் ஏனைய சேவைகள் பொது மக்களுக்கு சேவை செய்ய நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான நிர்வாக நடவடிக்கைகள், தொடர்ச்சியான சேவைகள் மற்றும் அதன் வாழ்வாதாரம் போன்றவற்றை வழிநடத்த, ஒருங்கிணைத்து மற்றும் மேற்பார்வையிடுதல் போன்றவை ஜனாதிபதி செயலகத்தின் பொறுப்பாகும்.
இந்த விரிவுரை கலந்துரையாடல் நிகழ்வில் மேற்குப் பாதுகாப்புப் படைத் தளபதி, 14 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையணிகளின் சார்ஜன்ட் மேஜர்கள் கலந்துகொண்டனர்.