30th November 2021 16:35:56 Hours
முதலாவது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் 70 வது ஆண்டு பூர்த்தி தினத்தையிட்டு மொறட்டுவையிலுள்ள லீலா ஜயசேகர சிறுவர் மேம்பாட்டு நிலையத்திற்கு சனிக்கிழமை (27) தொற்றுநீக்க உபகரணங்கள் உள்ளடங்களாக அத்தியாவசிய பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
மேற்படி நிவாரண பொதிக்குள் அரிசி, பருப்பு, பச்சை கடலை, மிளகாய், பால்மா உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, சிறுவர்களுக்கு அவசியமான பொருட்கள் மற்றும் தொற்றுநீக்கத்திற்கான உபகரணங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சீஎஸ் தெமுனி உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.