30th November 2021 16:05:56 Hours
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக இராணுவத்தினர் மேற்கொள்ளும் மனிதாபிமான உதவிகளின் ஓர் அங்கமாக யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் யாழ் குடாநாட்டில் அல்வாய் மற்றும் தும்பளையில் முன்னாள் போராளிக் குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (28) அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு தலைமையில் 55 வது படைப்பிரிவின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வைபவத்தில் திருமதி தர்ஷன் யோகேஸ்வரி மற்றும் திருமதி நிரோஜன் யோகம் ஆகியோரின் குடும்பங்களுக்கான இரண்டு வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கொழும்பில் உள்ள றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (தமிழ் மொழிமூலம்) 80வது பிரிவினர் மூலப்பொருட்களுக்கான செலவினை ஏற்றதோடு 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 4 வது இலங்கை சிங்கப் படையணியினரால் நிர்மாண பணிகளுக்கான ஆளணி மற்றும் பொறியியல் ,தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டதோடு, இத்திட்டமானது 551 வது பிரிகேட் தளபதியினால் மேற்பார்வை செய்யப்பட்டது.
இந் நிகழ்வுகளின் பின்னர், யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியியவர்களால், பயனாளி குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதேநேரம், நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் சில விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அல்லது அவர்களது விதவைக் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்தலை சில வருடங்களாக யாழ்-பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் முன்னின்று செயற்பட்டுத்தி வருகின்றது. இவ் அடிக்கல்நாட்டு நிகழ்வு சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் 55 வது படைப்பிரிவின் தளபதி, 551, 552 வது மற்றும் 553 வது பிரிக்கேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.