Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2021 17:10:40 Hours

6 வது இலங்கை கவச வாகன படையினரால் வெளிநாட்டில் வசிப்பேரின் உதவியுடன் ஒரு புதிய வீடு நிர்மாணிப்பு

அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையரான திரு நிஹால் உடுகமசூரிய அவர்களின் நிதியுதவியுடன் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் 223 வது பிரிகேட்டின் 6 வது இலங்கைக் கவச வாகனப் படையணியினரால் துசிதபுர,மைலவெவ பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவி ஞாயிற்றுக்கிழமை (28) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னேடுக்கப்பட்டது. 223 வது பிரிகேட் தளபதி கேணல் ரவீந்திர ஜெயசிங்க மற்றும் 6 வது இலங்கை கவச வாகனப் படையின் கட்டளை அதிகாரியின் ஒத்துழைப்புடன் நிர்மாண பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெற்ற இந்த நிகழ்வின் போது தங்குமிடம் இல்லாது குழந்தைகளுடன் அநாதரவான நிலையில் வாழ்ந்து வந்த பயனாளியான திருமதி பிரதீபிகா லக்ஷாந்தினி என்பவரிடம் புதிய வீட்டின் சாவிகள் கையளிக்கப்பட்டன.

மத அனுஷ்டானங்களை தொடர்ந்து இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் புதிய வீட்டின் சாவிகள் வழங்கி வைக்கப்பட்டன.