29th November 2021 07:00:45 Hours
பான்கொல்லயில் நவம்பர் 17-19 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி சுற்றுப் போட்டிகளில் ‘அபிமன்சல 3’ இன் அங்கவீனமுற்ற போர் வீரர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஐ.எச்.எம்.டி.எச். சேனாரத்ன மற்றும் பான்கொல்ல அபிமன்சல 3 இன் தளபதி கேணல் ஏ.எச்.விஜேகுணவர்தன ஆகியோரின் அழைப்பின் பேரில் இப்போட்டி நிகழ்வுகளின் பிரதம அதிதியாக இராணுவ சதுரங்க கழக தலைவரும் இலங்கை படை கவச வாகன படையணியின் படைத் தளபதியும் புத்தல அதிகாரி தொழிலாண்மை மேம்பாட்டு நிலையத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட அவர்கள் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். இப் போட்டியானது தனிநபர் மற்றும் குழு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
அபிமன்சல 2, அபிமன்சல 3 மற்றும் ராகம ரணவிரு செவன ஆகிய இடங்களில் இருந்து 22 க்கும் மேற்பட்ட போர்வீரர்கள் இப் போட்டியில் போட்டியிட்டனர். போட்டி நிறைவில் குழு சாம்பியன்ஷிப்பை ‘அபிமன்சல 3’ வீரர்கள் கைப்பற்றினர். 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களை முறையே ராகம - ரணவிரு செவன மற்றும் அபிமன்சல 2 ஆகியன பெற்றுக்கொன்டன.
தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டி பிரிவில், 22 வீரர்களுடன் போட்டியிட்ட அபிமன்சலா 3 இன் கோப்ரல் ஆர்.டி.டி.எஸ் தசநாயக்க முதலிடத்தைப் பெற்றார். 2 வது மற்றும் 3வது இடங்களை முறையே சார்ஜன்ட் டி.ஜீ.எம் பிரேமலால் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரி II கே. டபிள்யூ.ஏ சமந்த ஆகியோர் தனதாக்கி கொண்டனர்.
வியாழன் (25) இடம்பெற்ற இறுதிச் சம்பியன்ஷிப் போட்டியில் ‘அபிமன்சல-3’ சதுரங்க அணி சம்பியன்ஷிப் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டதுடன் பிரதம அதிதியிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.