29th November 2021 10:00:45 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 233 வது பிரிகேடினரால் வாகரை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட பண்புகளை மேம்படுத்தல் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலான பயிற்சிகள் என்பன வியாழக்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேர்வழிச் சிந்தனை, சமூக ஒழுக்கம், திறன் மேம்பாடு, மனநலம் மற்றும் நிலைப்புத் தன்மை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வழி போன்றவற்றை மேம்படுத்துவதற்காக அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், சில கிரிக்கெட் தொடர்பிலான அமர்வுகள் துறைசார் நிபுணர்களால் நடத்தப்பட்டதோடு, அதன் நடைமுறைத் தன்மைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த மற்றும் 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் கலாநிதி ரவிக்குமார், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு ஆலோசகர் திரு. நிலந்த விமலவீர, அம்பாறை மாவட்ட கிரிகட் பயிற்றுவிப்பாளர் திருமதி ஐடா ஜொன்ஸன், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் டில்கி வீனகொட, கபீர் அன்வர்தீன் ஆகியவர்களுடன் 23 வது படைப்பிரிவு தளபதி, 233 வது பிரிகேட் தளபதி, கதிரவெளி தேசியக் கல்லூரி மற்றும் வாகரை மகா வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்கள் ஆகியோர் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.