29th November 2021 21:33:16 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பூநகரின் பள்ளிக்குடா பகுதியைத் தளமாகக் கொண்டு அமைந்துள்ள 66 வது படைப்பிரின் 661 வது பிரிக்கேட்டின் 5 வது (தொ) இயந்திரவியல் கலாட் படையினர் செம்மோட்டை குளக்கட்டு பகுதியில் ஏற்பட்ட கசிவினை விரைந்து சென்று சீரமைத்தனர்.
இப் பிரதேச நீர்ப்பாசன அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் படி இப்பகுதியில் பெரும் அனர்த்தமாக மாறுவதற்கு முன்னர் படையினர் மணல் மூட்டைகளை குவித்து, குளத்தின் கட்டில் கசிவு மற்றும் மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்தனர்.ஞாயிற்றுக்கிழமை (28) மாலை வரையில் படையினர் குளக்கட்டின் சுவரின் கசிவுப் பகுதியை திருத்தும் பணியைத் தொடர்ந்தனர்.
கட்டளை அதிகாரி மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் பணிப்புரையின் பேரில், ஓர் அதிகாரி மற்றும் சுமார் 10 சிப்பாய்கள் இணைந்து குளத்தின் சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர்.