29th November 2021 14:50:31 Hours
இராணுவத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதி தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் நிலம் ஹேரத் அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று செல்லும் முன் இராணுவ தளபதியின் அழைப்பை ஏற்று தனது குடும்பத்தாருடன் இராணுவத் தளபதியை திங்கட்கிழமை (29) சந்தித்தார்.
இவர் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரியாக தனது பதவிக் காலத்தில் பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். இதன்போது பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்படி அதிகாரி பதவி நிலைகளை வகித்த காலங்களில் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவை மற்றும் வகிபாகங்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்ததோடு, சேவை காலத்தில் அவரது நேர்மையான செயற்பாடுகள் தொடர்பில் பெரிதும் பாராட்டினார்.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நிலையத் தளபதியாகவும், அண்மைக்காலமாக கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் தளபதியாகவும் பணியாற்றிய அவர் சவாலான பணிகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவர் வெவ்வேறு பகுதிகளிலும் இராணுவத்திற்காக அர்பணிப்புடன் சேவையாற்றியிருந்த அதேவேளை, அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவரது குடும்பத்தாருடன் இருக்கும் வாய்ப்புக்களையும் அவர் தவறவிட நேர்ந்திருந்தமை தொடர்பிலும் தளபதி நினைவுகூர்ந்தார்.
அதனையடுத்து இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், அவரது குடும்பத்தினரின் நலன்கள் குறித்தும் இராணுவத் தளபதி கேட்டறிந்துகொண்டார். இதன்போது மேற்படி அதிகாரியின் பிள்ளைகளுடன் கலந்துரையாடிய ஜெனரல் சவேந்திர சில்வா சந்திப்பின் நிறைவில் அவர்களுடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.
ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியால் தனது சேவைக்காலத்தில் இராணுவ தளபதியால் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றிகளை கூறிக்கொண்டதன் பின்னர், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் நிலம் ஹேரத் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு அதற்கான அடையாளமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் அவரது குடும்பத்தினருக்கான விசேட பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.