Header

Sri Lanka Army

Defender of the Nation

29th November 2021 14:52:44 Hours

யாழ் படையினரால் மேலும் இரண்டு புதிய வீடுகள் நிர்மாணிப்பு

யாழ் புகழ்பெற்ற நன்கொடையாளர்களான திரு மற்றும் திருமதி மோகன் சங்கர் அவர்களின் அன்பளிப்புடன் காரைநகர் மற்றும் புத்தூர் பகுதிகளில் வாழும் வறுமையான குடும்பங்களுக்கான இரண்டு புதிய வீடுகள் யாழ் படையினரால் நிர்மாணிக்கப்பட்டன. இந்த திட்டமானது அப் பிரதேசத்தின் கிராம சேவகர்களால் இவர்களின் அவல நிலைமை தொடர்பில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டது.

இவ் இரு வீடுகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு குறிப்பிட்ட சில வாரங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு சனிக்கிழமை (27) தனி தனியாக இரு பயனாளிகளுக்கும் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நன்கொடையாளர்களுடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இந்து மத சம்பிரதாய முறைப்படி இடம்பெற்ற சடங்குகளுக்கு மத்தியில் வீட்டின் திறப்புக்கள் பயனாளிகளான திரு.தம்பிராசா மதியழகன் மற்றும் திரு எஸ் சுரேஷ்குமார் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டன.

இந்த திட்டமானது நல்லெண்ணம், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் நிமித்தம் படையினரின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களைப் பயன்படுத்தி சிவில் சமூகத்தின் வாழ்வாதாரத் மற்றும் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்காக இராணுவத் தளபதியின் எண்ணகருவிற்கிணங்க இந்த இரண்டு வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இப் பணிகள் 513 வது மற்றும் 522 பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 15 வது கஜபா படையணியின் படையினரால் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வின் போது வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன அன்றைய பிரதம அதிதியால் பயனாளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நன்கொடையாளிகள் யாழ் பாதுகாப்பு படையினருடன் இணைந்து சில மாதங்களில் அத்தகைய கட்டுமானங்களுக்கான அனைத்து மூலப்பொருட்களையும் வழங்குவதில் முக்கிய பங்காற்றினர்,

51 வது மற்றும் 52 வது படைப்பிரிவுகளின் தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பதவி நிலை, மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் வழங்கல், 513 வது மற்றும் 522 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். சுகாதார வழிகாட்டுதல்களை பின்னற்றி இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.