29th November 2021 09:00:45 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவின் 623 வது பிரிகேடின் 9 வது கஜபா படையணி படையினரால் வெலிஓயா கெமுனுபுர ஆரம்பப் பாடசாலையின் மணவர்களின் கல்வியை தொடர்வதற்கும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் உதவி செய்யும் நோக்கத்துடன், தென்னிலங்கையைச் சேர்ந்த வண. அனுருத்த தேரர் அவர்களின் அனுசரணையில் குறைந்த வருமானம் பெறும் 35 மாணவர்களுக்கு தலா ரூ.6000/= மதிப்புடைய பாடசாலை புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள் பொதிகள் 14 நவம்பர் 2021 பகிர்ந்தளிக்கப்பட்டன.
இத் திட்டத்தின் மூலம் பள்ளியில் உள்ள 35 ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு குறித்த சலுகை வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீ திஸ்ஸபுர வித்தியாலயத்திற்கு நூலக உபகரணங்கள், கணனி மற்றும் பல கற்பித்தல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், சுமார் 170 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
9 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.முனசிங்க அவர்களின் மேற்பார்வையில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றன. 62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் ஆசிர்வாதத்துடன் இடம் பெற்ற இந்த நிகழ்வில் 623 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் மெதகொட மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரதம சிவில் விவகார இணைப்பாளர் லெப்டினன்ட் கேணல் என். மடுகல்ல ஆகியோர் பங்குபற்றினர்.
நன்கொடையாளர் பிக்குவின் பிரதிநிதிகள், அதிபர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இரு பாடசாலைப் பகுதிகளினதும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.