Header

Sri Lanka Army

Defender of the Nation

27th November 2021 18:05:13 Hours

வரலாற்று சிறப்புமிக்க பிரபல பிரடெரிக் கோட்டை "எட்டிபொல" குடும்ப விடுதி புத்துயிர் பெற்றது

திருகோணமலை, பிரடெரிக் கோட்டையில் 2 வது (தொண்டர்) கஜபா படையணி முகாம் வளாகத்தில் நான்கு வசதியான அறைகளுடன் கட்டப்பட்ட புதிய மாடி கட்டமான 'எட்டிபொல விடுமுறை பங்களா' திருகோணமலையில் நடைபெற்ற பல இராணுவ விழாக்களில் கலந்துகொண்ட பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் சனிக்கிழமை (27) படையினரிடம் கையளிக்கப்பட்டது.

வரலாற்று கோட்டைக்குள் கஜபா படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வசதி கட்டுமானத்திற்கு பொறியியல் சேவை படையணியின் படையினரால் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவம் வழங்கப்பட்டது. அங்கு பிரபு "எட்டிபொல" குடும்பத்தின் மூதாதையரின் பங்களாவின் எச்சங்கள் தொல்பொருள் இடிபாடுகள் இன்றுவரை உள்ளன. அருகிலுள்ள இடத்திற்கு உரிய அங்கீகாரத்தையும் நிலைப்பையும் வழங்கும் படையினரின் புதிய விடுமுறை வசதிக்கு 'எட்டிபொல விடுமுறை பங்களா' என்று பெயரிடவும் முடிவு செய்தனர்.

வளாகத்தை வந்தடைந்த இராணுவத் தளபதியை கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே, கஜபா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம, 2 வது (தொ) கஜபா படையணி கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஏ.கே.எம்.யு.கே. நவரத்ன ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அன்றைய பிரதம அதிதி 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் நினைவு பலகையை திரைநீக்கம் செய்து நாடா வெட்டி திறந்து வைத்தார். ஜெனரல் ஷவேந்திர சில்வா அதன் பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் இராணுவ நிர்மாணிப்பாளர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதுடன், பின்னர் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி, 22 வது படைப்பிரிவின் தளபதி, கஜபா படையணி தலைமையக தளபதி ஆகியோருடன் அதன் உட்புற வசதிகளை பார்வையிட்டார்.

போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட திருகோணமலை கோட்டை என்றும் அழைக்கப்படும் பிரெட்ரிக் கோட்டை, கிபி 1624 இல் கட்டி முடிக்கப்பட்டது, மேலும் அதே இடத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பண்டைய இந்து கோவிலான திருகோணேஸ்வரம் கோவிலின் (ஆயிரம் தூண்களின் கோயில்) இடிபாடுகளில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. யாழ் குடாநாட்டின் ஆக்கிரமிப்பாளரான மூன்றாம் பிலிப் இன் கீழ் போர்த்துகீசியர்களால் இந்த கோவில் அழிக்கப்பட்டது. திருகோணமலை கோட்டை 1665 இல் டச்சுக்காரர்களால் அகற்றப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதுடன் கோட்டை ப்ரெட்ரிக் என மறுபெயரிடப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 22 வது படைப்பிரிவின் தளபதி, கஜபா படையணியின் நிலையத் தளபதி, மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இவ் எளிமையான திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.