29th November 2021 11:00:45 Hours
திருகோணமலை இராணுவ வழங்கல் பாடசாலை நாட்டின் மிகப் பெரிய பணியாளர்களின் முக்கிய நிர்வாகப் பணிகளைச் செய்கிறது, மேலும் விநியோக திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் சிறந்த மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடிய படையினர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (27) காலை இராணுவ வழங்கல் பாடசாலை வளாகத்தில் பயிலுனர்களுக்கான கிளப்பன் விவ் புதிய விடுதி வளாகத்தை திறந்து வைத்தார்.
பிரதம விருந்தினர் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைவாக பாதுகாவலர் அறிக்கயிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் பின்னர் அன்றைய முக்கிய நிகழ்ச்சி நிரலில் பங்கேற்க புறப்படுவதற்கு முன்தாக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டுவதற்காக இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர அவர்களினால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
சுப நேரத்தில் அன்றைய பிரதம விருந்தினர், ‘செத்பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில், அதன் கட்டுமானத்தின் பின்னணியினை வெளிப்படுத்தும் நினைவு பலகையை திரை நீக்கம் செய்து நாடா வெட்டி கட்டிடத்தை திறந்த வைத்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாதிரி அறைகுள் சென்றார். இராணுவத்தின் தொழில்நுட்பதிறன் வாய்ந்த பொறியியலாளர் சேவைகள் படையினர் இராணுவ நிதியுடன் 20 அறைகள் கொண்ட முழு அடுக்குமாடி வளாகத்தை தங்கள் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் தொழில்முறை உயர் தரத்திற்கேற்ப நிர்மாணித்தனர்.
புதிய கட்டிடத்தின் மேல் தள உட்புறத்தை உன்னிப்பாகப் பார்த்த பின்னர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி மற்றும் பிற அதிகாரிகளுடன் பயிற்சியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பல அறைகளை பார்வையிட்டார். இராணுவ வழங்கல் பாடசாலை மூன்று முக்கிய படநெறிகளை முன்னெடுக்கின்றது. வழங்கல் பணியாளர் பாடநெறி, கனிஸ்ட அதிகாரிகள் வழங்கல் பாடநெறி, மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான பாடநெறி என்பன அவையாகும்.
கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணண்டோ, கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இராணுவ வழங்கல் பாடசாலையின் திறப்பு விழா நிகழ்வில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக கலந்துகொண்டனர்