26th November 2021 15:07:28 Hours
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 143 வது பிரிகேட் முதலாவது இலங்கைத் தேசியக் பாதுகாவலர் படையணியின் சிப்பாய்கள் நிக்கவெரட்டிய திவுல்லேகொட பொதுப் பிரதேசத்தில். வெள்ளத்தால் சேதமடைந்த அலுத்வெவ குளக்கட்டின் மீது மணல் மூட்டைகளை கொண்டு வியாழன் (25) அணைக்கு பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்தனர்.
அண்மையில் பெய்த அடைமழை காரணமாக குளத்தின் சுமார் 10 மீற்றர் நீளம் பாரியளவில் பாதிக்கப்பட்டு நீர் கசிவு ஏற்பட்டு கசிவு அதிகரித்தால் பெரும் அனர்த்தம் ஏற்படும் என இராணுவப் படையினர் முன் எச்சரிக்கையாக செயல்பட்டனர்.
அதற்கிணங்க படையினர் அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளின் ஆதரவுடன் நிக்கவெரட்டிய பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட மணல் மற்றும் உறைகளை உபயோகித்து குளத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.
143 வது பிரிகேட் தளபதி கேணல் T.M.F கிட்ச்சிலன் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில், முதலாவது இலங்கைத் தேசியக் பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் A.U.K ஹெட்டியாராச்சி மற்றும் மேஜர் M.G.M.S பண்டார உட்பட 2 அதிகாரிகள் மற்றும் 30 சிப்பாய்களைக் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டனர்.