26th November 2021 23:00:57 Hours
“கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ராஜகிரியவில் (25) நடைபெற்ற சந்திப்பொன்றில் தெரிவித்த விடயமானது கடந்த நாட்களில் சுமார் 700 நோயாளிகள் இணங் காணப்படுகின்றனர், மேலும் ஒரு நாளைக்கு 20-30 இறப்புகள் உள்ளன. கடந்த வாரத்தை விட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுகாதார அமைச்சின் வசதிகள் மற்றும் அரசாங்க வசதிகள் மூலம் மக்களுக்கு 84% பேருக்கு தடுப்பூசி போட முடிந்தது. இதனைத்தான் நாடு எங்களிடம் எதிர்பார்த்தது. நாங்கள் இப்போது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தத் தொடங்கியுள்ளோம் என கூறினார்.
“மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இன்னும் முதல் தடுப்பூசியைப் பெறவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் வயோதிபர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறியதுடன் பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமாக பெரியவர்களின் சதவீதம் இன்னும் குறைவாகவே உள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களிலும் அந்த வீதத்தை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கும் பட்சத்தில் அவசரத் திட்டங்களுடன் தயாராக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு பொதுமக்கள் பொறுப்பேற்று, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும். நிலையான சுகாதார முறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் நினைவூட்டல்கள் வழங்கப்பட்டன, இதனைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தாமல் எந்த தடுப்பு செயற்பாடுகளும் செய்ய சரியான தீர்மானம் எடுத்தல் வேண்டும். மேலும், பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் தொடரும். பூஸ்டர் தடுப்பூசி எதிர்வரும் மாதங்களில் பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் போன்றவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டப்படும் என ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
“கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவருக்கும் இராணுவ தளபதி நன்றி தெரிவித்ததுடன் பொது மக்கள் கொவிட்-19 தொற்றைக் கண்டறிவதற்கான சுய பரிசோதனையை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு லெம்ப் பரிசோதணை உபகரணங்கள் ( LAMP test kit) அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, தெரிவித்தார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் தேசிய கொவிட் தடுப்பு மையத்தின் கூட்டத்தில் பங்கேற்ற பலர் தற்போதைய நிலைமை குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.