26th November 2021 22:47:04 Hours
இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பணிகளை அவதானிக்கும் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன், ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவப் படைகளின் தலைமைப் பொறியியலாளர் லெப்டினன் ஜெனரல் யூரி மிகைலோவிச் ஸ்டாவிட்ஸ்கி அவர்கள் இன்று (25) காலை இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவப் படைகளின் தலைமைப் பொறியியலாளர் லெப்டினன் ஜெனரல் யூரி மிகைலோவிச் ஸ்டாவிட்ஸ்கி அவர்கள் இலங்கை இராணுவ மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்களை வழங்கினார். இவர் கடுவான் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் இடங்களுக்கு புதன்கிழமை (24) விஜயம் செய்ததன் பின்னர் இலங்கை இராணுவத் தளபதியை சந்தித்துள்ளார்.
ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ரஷ்ய இராணுவத்தினர் காட்டிய அக்கறைக்காக தனது நன்றியைத் தெரிவித்ததோடு, ரஷ்ய இராணுவம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி வருவதைப் பாராட்டினார். அதன் பின்னர், இலங்கைப் பொறியியலாளர் படையினர் ஆபத்தான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலதிகமாக பல்வேறு தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகள், வீதி நிர்மாணப் பணிகள் போன்றவற்றில் எவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை இராணுவத் தளபதி விளக்கி, இலங்கைப் பொறியியலாளர்களின் சாதனைகளைப் பாராட்டினார்.
“பொறியியல் துறையின் பிரதம அதிகாரியாக நீங்கள் இலங்கைக்கு வருகை தந்தமை எமது நிறுவனத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதுடன் நீங்கள் கடந்த காலத்தில் சிரியாவில் சேவையாற்றியுள்ளீர்கள், மேலும் கண்ணிவெடி அகற்றும் பணியில் புகழ்பெற்ற வீரராகவும் ரஷ்ய கூட்டமைப்பின் கடற்படை மற்றும் விமானப்படை பொறியியலாளர்களின் தலைமை அதிகாரியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
வருகை தந்த ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவப் படைகளின் தலைமைப் பொறியியலாளர் இலங்கை இராணுவத் தளபதியிடம், இலங்கையில் நடைபெற்று வரும் இயந்திர மற்றும் பாரம்பரிய மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் தாம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். லெப்டினன் ஜெனரல் யூரி மிகைலோவிச் ஸ்டாவிட்ஸ்கி இரு நிறுவனங்களுக்கிடையில் நிலவும் இராணுவம் மற்றும் இராணுவம் ஒத்துழைப்புத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதில் படையினர்களுக்கு பயிற்றுவிப்பதன் மூலம் இலங்கை பொறியியலாளர்களுக்கு மேலும் உதவ விரும்புவதாகவும் மேலும் பொறியியல் துறையில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சில நாட்களுக்கு முன்னர் கிண்ணியாவில் இடம்பெற்ற படகு அனர்த்தங்களை தடுப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் உபகரணங்களை இலங்கைக்கு பொற்றுதருவதற்கு உதவுமாறும் இலங்கைக்கு வருகை தந்த இராணுவப் பொறியியலாளர்களிடம் கேட்டுக் கொண்டனர். பின்னர் கொவிட் - 19 பரவல் குறையும் வரை ஸூம் வலைதளங்கள் மூலம் இயந்திர மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
சில நாட்களுக்கு முன் 2020 பெப்ரவரியில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் ரஷ்யா தரைப்படைகளின் இராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் இலங்கைக்கு விஜயம் செய்ததையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
லெப்டினன் ஜெனரல் யூரி மிகைலோவிச் ஸ்டாவிட்ஸ்கி அவர்கள் இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதை இயந்திர மற்றும் செய்முறை அகற்றுதல், நாய்கள் மூலம் கண்ணிவெடி கண்டறிதல் இதுவரை இராணுவ கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து இலங்கை இராணுவத் தளபதியிடம் தெரிவித்தார். ஏனைய செயற்பாடுகள் அதிக அபாயகரமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஏனைய படையணிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், அந்தத் சிப்பாய்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உறுதியளித்தார்.
இலங்கைக்கான ரஷ்ய இராணுவப் பொறியியலாளர் பிரதிநிதிகள் குழுவில், ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவ படைகளின் பொறியியல் படைகளின் தலைமை தளபதியான லெப்டினன் ஜெனரல் யூரி மிகைலோவிச் ஸ்டாவிட்ஸ்கி தலைமையில், ஆயுதப்படைகளின் பொறியியலாளர் தலைமை பணிப்பகத்தின் அதிகாரி கேணல் அலெக்சாண்டர் வியோக்டோரோவிச் ஸ்க்வோர்ட்சோவ் அடங்குவார். ரஷ்ய கூட்டமைப்பின், கேணல் அன்ட்ரே விளாடிமிரோவிச் ரோமன்சுக், பொன்டூன் படையணியின் படைத் தளபதி மற்றும் பொறியியல் படையினரின் பயிற்சி நிலையத்தின் பிரதானி கேணல் இகோர் இவனோவிச் பாவெல்கோ ஆகியோர் செவ்வாய்க்கிழமை (23) இலங்கையை வந்தடைந்ததுடன், பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்களை வரவேற்றனர். அதன் பின்னர் அவர்கள் இராணுவத்தினரின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக இலங்கை இராணுவம் தூதுக்குழுவிற்கு முன்னர் வடக்கு பகுதிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் சவேந்திர சில்வா தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் ரஷ்யப் பொறியியலாளர்களின் பிரதானிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.
இச் சந்திப்பில் இலங்கை இராணுவத்தின் பிரதான களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் ஆகியோரும் கலந்து கலந்துகொண்டனர்.