Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2021 14:57:49 Hours

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் தனது கட்டுப்பாட்டு கிளைகளுக்கு விஜயம்

இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள், தனது கிளையின் கட்டளையின் கீழுள்ள அமைப்புக்களுக்கான விஜயத்தினை அண்மையில் மேற்கொண்டார்.

முதலில், அவர் ஹேகித்தயில் அமைந்துள்ள ரணவிரு புனர்வாழ்வு பணிப்பகத்திற்கு தனது விஜயத்தினை மேற்கொண்டு அவ்வளாகத்தை சுற்றிப் பார்ப்பதற்கு முன், பணிப்பகத்தின் வகிபங்கு மற்றும் பணிகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

தொடர்ந்து ராகமயில் அமைந்துள்ள ரணவிரு செவனவிற்கான விஜயத்தினை மேற்கொண்டு அதன் நிர்வாகம் மற்றும் செயற்பாட்டு அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். பின்னர் ரணவிரு செவன தொடர்பான கருத்துக்களை வருகை தந்த நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு ரணவிரு செவன தளபதி வழங்கினார்.

இறுதியாக மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அத்திட்டிய மிஹிந்து செத் மெதுரவிற்கு தனது விஜயத்தை மேற்கொண்டு அவயங்களை இழந்த போர்வீரர்களின் நலன் மற்றும் அதன் நிர்வாக அம்சங்களை கேட்டறிந்தார். அதன் பின்னர் மிஹிந்து செத் மெதுரயின் தளபதி அவர்களால் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களை வரவேற்றதுடன், மிஹிந்து செத் மெதுர தொடர்பான கருத்துக்களையும் வழங்கினார்.

இந்த விஜயத்தில் புனர்வாழ்வு பணிப்பகம் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் கிளையின் பல பணிநிலை அதிகாரிகள் உட்பட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.