Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2021 17:36:44 Hours

கிருஸ்தவ தேவாலய சீரமைப்பிற்க்கு இலங்கை இயந்திரவியல் காலாற்படையின் பங்களிப்பிற்கு தேவாலய சபையினர் பாராட்டு

2020 மே மாதம் மின்னல் தாக்கியதில் சேதமடைந்து, புதுப்பிக்கப்பட்ட வாத்துவ தூய ஆவியானவர்கள் தேவாலயம் கொழும்பு பேராயர் வண. (கலாநிதி) மால்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களினால் செவ்வாய்க்கிழமை (23) மாலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 4 வது இலங்கை இயந்திரவியல் காலாற்படை சிப்பாய்களினால் பொறியியல் சேவை படையணியின் படைத் தளபதியும் பொறியியல் சேவைப் பணிப்பகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் கே.எம்.எஸ்.குமாரவின் வழிகாட்டுதலின் பேரில் தேவாலய உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேவாலயத்தைப் புதுப்பிக்க ஆதரவளித்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தமது ஆசீர்வாதங்களை வழங்கியதுடன், இந்தத் திட்டத்தைத் தொடருமாறு படையினருக்கு பணித்தார்.

பாதிரியார்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி பக்தர்கள் மற்றும் பிற நன்கொடையாளர்களின் மூலப்பொருட்களின் ஆதரவுடன் இயந்திரவியல் காலாற்படை படையினர் கட்டுமானத்தை செய்து முடித்தனர்.

இத்திறப்பு விழா பேராயரின் தலைமையில் பாதிரியார்கள் மற்றும் பக்தர்களின் பங்குபற்றலின் போது இயந்திரவியல் காலாற்படை சிப்பாய்களின் பங்களிப்பில் புனரமைக்கப்பட்டமையை வெளிப்படுத்தும் நினைவு பலகை தரை நீக்கம் செய்யப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் இத்திட்டத்திற்கு இராணுவம் அளித்து வரும் ஆதரவைப் பாராட்டியதுடன், திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

அதேபோன்று, வாத்துவ மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை கயான் பிரசாந்தவும் தனது சுருக்கமான உரையில், இத்திட்டத்திற்காக இராணுவப் படையினரின் சேவை விலைமதிப்பற்றதும் மற்றும் முழு கிறிஸ்தவ சமூகத்தினரின் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியது எனவும் தெரிவித்தார்.