Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2021 14:53:41 Hours

513 வது பிரிகேட் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்துக்கள் மற்றும் குழந்தைக்கான உடைகள் வழங்கல்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் 513 பிரிகேட் மற்றுமொரு சமூகம் நலன் திட்டமாக கீரமலைப் பகுதியில் உள்ள 40 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் குழந்தைக்கான உடைகள், அத்தியாவசியப் பொருட்களை சனிக்கிழமை (20) 513 வது பிரிகேட் தலைமையகத்தின் கோரிக்கையின் பேரில் பல தனியார் நிறுவனங்களால் வழங்கப்பட்டன.

513 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 51 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சங்கீதா கோகுலதர்ஷன் மற்றும் சிரேஷ்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் இணைந்து விநியோகத்தில் கலந்துகொண்டனர்.