24th November 2021 14:59:35 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் இராணுவப் புலனாய்வுப் படையணி மற்றும் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர், பொலிஸாருடன் இணைந்து தெலுல்ல, எதிலிவெவ பிரதேசத்தில் திங்கட்கிழமை (22) ஒரு ஏக்கர் கஞ்சா பயிர்ச் செய்கையை முற்றுகையிட்டனர்.
சுமார் 4 - 6 அடி உயரமுள்ள 20,255 க்கும் அதிகமான கஞ்சா செடிகள் முற்றாக அகற்றப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குடா ஓயா பொலிஸ் நிலையத்திற்கு கஞ்சா செடிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் கட்டளை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.