23rd November 2021 10:11:13 Hours
இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான செயல்களில் கண்ணிவெடி அகற்றும் பணியினை அவதானித்து கண்ணிவெடி அகற்றலை துரிதப்படுத்துவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அறிவு மற்றும் வழிகாட்டல்களைப் பகிர்ந்து கொள்ள உத்தேசித்துள்ள ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவப் படைகளின் தலைமைப் பொறியியலாளர் லெப்டினன் ஜெனரல் யூரி மிகைலோவிச் ஸ்டாவிட்ஸ்கி தலைமையிலான இராணுவக் குழு இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இன்று (23) காலை இலங்கை வந்தடைந்தது.
இலங்கையில் 4 நாட்கள் தங்கியிருக்கும் குழு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு உடனான அறிமுக சந்திப்பின் பின்னர் 4 பேர் கொண்ட ரஷ்ய தூதுக்குழு வடக்கில் முகமாலை மற்றும் கட்டுவான் பகுதிகளில் பணிபுரியும் இராணுவத்தின் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அவதானிக்க திட்டமிட்டுள்ளனர்.
இவ் ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் லெப்டினன் ஜெனரல் யூரி மிகைலோவிச் ஸ்டாவிட்ஸ்கி, ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவத்தின் தலைமை பொறியியல் படை பணியகத்தின் தலைமை அதிகாரி கேணல் அலெக்சாண்டர் விக்டோரோவிச் ஸ்க்வோர்ட்சோவ், பொன்டூன் பிரிகேட் தளபதி கேணல் ஆண்ட்ரே விளாடிமிரோவிச் மற்றும் பொறியியல் படையினர் பயிற்சி மையத்தின் தளபதி இகோர் இவனோவிச் பாவெல்கோ, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவத்தின் தலைமைப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் கள பொறியியலாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுருத்த செனவிரத்ன ஆகியோர் வருகை தந்த குழுவினரை விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றனர்.
இதன்பின்னர் கண்ணிவெடி அகற்றலின் இயந்திரவியல் மற்றும் பாரமபரிய முறைகளில் அகற்றுதல், கண்ணிவெடிகளை கண்டறியும் நாய்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை பார்வையிட்டனர் பின்னர், குழுவினர் இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்திக்கவுள்ளனர்.
இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கு உதவுவதற்காக இதேபோன்ற குழு இலங்கைக்கு வருகை தந்ததையடுத்து, மாஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர உறவு ரஷ்ய விஜயம் சாத்தியமானது. பின்னர், இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள பொறியியலாளர்களை சந்தித்து அவர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி இராணுவம், ஹலோ டிரஸ்ட் மற்றும் வேறு சில நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் 12.88 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை மேலும் இராணுவ கண்ணிவெடி அகற்றுபவர்கள் 1.24 சதுர கிலோமீற்றர் நிலத்தை அகற்ற தீர்மானித்துள்ளனர்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் ரஷ்ய பிரதிநிதிகளுடன் நடத்திய நெருக்கமான ஆலோசனைகளைத் தொடர்ந்து ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவம் கடந்த 2 ஆண்டுகளில் இலங்கை படையினருக்கு தங்கள் நட்புக் கரத்தை வழங்கியுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது ரஷ்ய நண்பரின் அழைப்பின் பேரில் 6 நாள் நீண்ட நல்லெண்ண சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய தூதரக அதிகாரிகளும் இத் தூதுக்குழுவின் பயணத்தில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.