Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd November 2021 18:52:30 Hours

தனியார் நிறுவனத்தினரால் இராணுவத்தினருக்கு முககவசம் நன்கொடை

பருத்தி, நூல், புடைவை, சட்டைகள், உபகரணங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் எஸ்குவெல் இலங்கை தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள், கொவிட் - 19 தொற்றுநோய்க்கு எதிராக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் தடுப்புப் பணிகளைப் பாராட்டியதுடன் இன்று (23) காலை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பருத்தி முக கவசங்களை கொவிட் - 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் , பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் வழங்கி வைத்தனர்.

எஸ்குவெல் இலங்கை தனியார் நிறுவனத்தின் நன்கொடையாளர் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது முகாமையாளர் திருமதி ரசிகா அமரகோன், திருமதி ஆர்.யு.ஏ மென்டிஸ், திரு என்.எஸ்.டி குமாரு மற்றும் திரு எம்.ஆர் ஜூங்கீர் ஆகியோரால் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு முக கவசங்களின் பொதிகள் வழங்கப்பட்டன. அந்த உயர்தர வெளிநாட்டு சந்தை சார்ந்த முக கவசங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் முன்னணியில் உள்ள இராணுவத்தினருக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து இருப்பதாக நன்கொடையாளர்கள் தெரிவித்தனர்.

நல்லெண்ணம் மற்றும் ஊக்கமளிக்கும் செயற்பாட்டினை ஏற்றுக் கொள்ளும் இந்த தேசிய முயற்சியுடன் இணைக்கப்பட்ட அவர்களின் சிந்தனை மற்றும் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். இதன் பின்னர் அந்த பிரதிநிதிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.