23rd November 2021 15:32:34 Hours
கொவிட்-19 நோய் தொற்று காரணமாக வைத்தியசாலைகளை அணுக முடியாமல் ஆதரவற்ற குடும்பங்களின் மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க ஆகியோர்களின் வழிகாட்டுதலின் பேரில், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீ்ழுள்ள 51 வது படைப்பிரிவு தலைமையகம். மற்றும் யாழ் பாதுகாப்புப் படைத்தலைமையகம் இணைந்து யாழ் குடாநாட்டில் உள்ள செல்வபுரம், யோகபுரம் மற்றும் கோப்பாய் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய நடமாடும் மருத்துவ முகாமினை ஞாயிற்றுக்கிழமை 21 நடாத்தியது.
சிவில் - இராணுவ ஒத்துழைப்புத் திட்டம், இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 03 வைத்திய அதிகாரிகள் மற்றும் 12 தாதியர்களைக் கொண்ட குழுவினால், 4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சிந்தன குமார மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையின் 04 வைத்திய அதிகாரிகள் தலைமையில் 15 தாதி உத்தியோகத்தர்கள் வைத்தியர் ரங்கன் மதன் தலைமையில் அந்த கிராமங்களில் உள்ள 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இது மக்கள் மற்றும் இராணுவத்தினர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிவில் சார்ந்த சமூகசார் சேவை திட்டங்களை மேம்படுத்துவதற்கான இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சமூக சேவையாகும்.
இந்த நடமாடும் முகாமிக்கு யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டி சத்தியமூர்த்தி மற்றும் 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க ஆகியோர் இந்த இடங்களுக்கு அழைப்பினை விடுத்து ஏற்பாட்டிற்கு ஆதரவளித்தனர். மேலும் இத்திட்டம் படையினரால் மூலம் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டது.