21st November 2021 09:40:58 Hours
அண்மையில் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் முதலாம் படை அதன் உருவாக்கத்தின் பின்னர் முதன்முறையாக அனுராதபுரம் புனித ருவன்வெலி மஹா சேய, ஜய ஸ்ரீ மஹா போதிய மிரிசவெட்டிய வளாகத்தில் முதலாம் படை கொடிக்கு ஒக்டோபர் 17-18 திகதிகளில் ஆசீர்வதிக்கும் வகையில் சமய நிகழ்வுகள் நடைப்பெற்றன.
முதலில் முதலாம் படை கொடி மரியாதை ஊர்வலமாக தூபியின் மேல் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அங்கு மகா சங்கத்தினர் கொடி மற்றும் அங்கு பணியாற்றும் படையினர்களுக்கு ஆசிர்வாதம் செய்தனர். மேலும் ஜெய ஸ்ரீ மஹா போதியில் போதி பூஜை மற்றும் 'நாத தேவாலயவில் சிறப்பு பூஜை உள்ளிட்ட மத அனுஷ்டானங்களுக்கு இந்நிகழ்வில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
படையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முதலாம் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க கலந்து கொண்டார். இப்படையானது 2021 ஒக்டோபர் 17 அன்று எந்தவொரு அவசர நிலைகளை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
இதன்பின்பு 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி, முதலாம் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவுடன் படையினர் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் கொடிக்கு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி முதலாம் படையின் படையினர் , 8 வது கஜபா படையணியின் படையினர், 58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார, முதலாம் படையின் பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் பிரபாத் கொடித்துவக்கு மற்றும் அதிகாரிகள், சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.