22nd November 2021 16:00:58 Hours
கிளிநொச்சி முதலாம் படையினாரால் அமெரிக்க நாட்டு இலங்கை வாசிகளின் அனுசரணையுடன் 100 உலர் உணவுப் பொதிகள் கிளிநொச்சி பொதுப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு புதன்கிழமை (17) கிளிநொச்சியில் நெலும் பியச கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டன.
முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அரிசி, பருப்பு, மிளகாய், பால்மா, பல சரக்கு பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய அவ் நிவாரணப் பொதிகளை விநியோகித்தார். பின்னர் அமெரிக்காவில் வசிக்கும் சேனக செனவிரத்னவின் அனுசரணைக்கு நன்றி கூறியதேடு இவ் வாரன அணுசரனை உதவிகள் தொடர வேண்டும் என கோரிக்கையையும் முன்வைத்தார்.