22nd November 2021 14:00:57 Hours
57 வது இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டி – 2021 சுகததாச மைதானத்தில் இன்று காலை (22) ஆரம்பமான போது இலங்கை இராணுவ பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இப்போட்டியில் அனைத்து படையணிகளையும் சேர்ந்து நூற்றுக்கணக்கான இராணுவ வீர வீராங்கனைகள் பங்கேற்பதுடன் இதில் மொத்தமாக 52 ஆண் மற்றும் பெண் தடகள போட்டி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. படையணி தலைமையகங்களில் நடைபெற்ற ஆரம்ப சுற்று போட்டிகளில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக போட்டிகள் வெள்ளிக்கிழமை (26) வரை தொடரும்.
இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியினை இராணுவ தடக்கள செயற்குழுவின் தலைவரும் முதலாம் பாதுகாப்ப படையின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்நிகழ்வு கொவிட்- 19 சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடாத்தப்படும் சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய அணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, மனித வள நிர்வாக பணிப்பாளர் பிரிகேடியர் உதய குமார, விளையாட்டுப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்க, நிலையத் தளபதிகள் ,சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்