Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd November 2021 12:00:50 Hours

இலங்கை சுற்றுலாக் கண்காட்சி 2021 விருது வழங்கும் நிகழ்விற்கு இராணுவத் தளபதிக்கு அழைப்பு

வன் கோல்பேஸ் (One Galle Face ) வளாகத்தில் உள்ள பெய்ரா லேக் (Beira Lake ) மற்றும் எவனு Ocean Avenue இல் 2021' ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம் பெற்ற இலங்கை சுற்றுலா கண்காட்சி நிகழ்வில் பரிசு வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு அழைப்பை ஏற்று பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கெளரவ அதிதியாக கலந்து கொண்டார்.

இராணுவம் மற்றும் இலங்கை இராணுவ உணவு வழங்கல் படைக்கு சொந்தமான 'லயா' ஹோட்டல்கள், நேரலை சமையல் போட்டிகள், கொக்டெய்ல் மற்றும் மொக்டெய்ல் போட்டிகள், ஆடைகள், கேக் அழங்கரிப்பு போட்டி மற்றும் கேக் வடிவமைப்பு போட்டி அகியவற்றில் தமது திறமைகளை வெளிப்படுத்தியமை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் பல வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இந் நிகழ்வின் போது, ஹம்பாந்தோட்டை, பலடுபான 'லயா' சபரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் லலித் ஹேவா அவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்தின் பிரிவின் பழைய மாணவர் சங்கத்தினரால் (ATEHM) பாராட்டுக்குரிய நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. மேலும் அவர் கடந்த 6 ஆண்டுகளில் விருந்தோம்பல் முகாமைத்துவத்தின் வழிகாட்டும் தலைவராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் பொருளாதாரத் துறையின் சுற்றுலா ஆய்வுத் திட்டத்தால் தொடங்கப்பட்ட சர்வதேச சுற்றுலாத் துறை உச்சிமாநாடு மற்றும் சுற்றுலா ஆராய்ச்சி மாநாட்டிற்கான அவரது கல்வி திட்டங்களை தொடங்கினார்.

இந்த விழாவின் போது, 2 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சார்ஜென்ட் S.M.C.S சமரநாயக்க தேனீர் கலவை போட்டியில் சிறந்தவருக்கான விருதை வென்றார். இதனை தொடர்ந்து ஜெனரல் சவேந்திர சில்வா கௌரவ அதிதியாகக் கலந்துகொண்ட 'இலங்கை சுற்றுலாக் கண்காட்சியின் (SLTE) 2021' விருது வழங்கும் நிகழ்வில், முன்னோக்கிச் செல்லும் இலங்கை சுற்றுலா: நிலைத்தன்மையுடனும், நிலைத்து இருங்கள்' என்ற தொனிப்பொருளில், சாதனையாளர்களுக்கு பாராட்டு விருதுகளை வழங்குவதில் இணைந்துகொண்டார். மேலும் கொவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்நிகழ்வு நவம்பர் மாதத்தில் ஒரு வாரம் 15 – 21 வரை நடைபெற்றது.

இலங்கை சுற்றுலா கண்காட்சி (SLTE) 2021 இந்த பரிமாற்றத்தை ஈட்டும் தொழில்துறையை மீண்டும் தொடங்குவதற்கும் மீட்பதற்குமான சாத்தியக்கூறுகளை மையமாகக் கொண்டதுடன், பார்வையாளர்களின் நோக்கங்களை சேகரித்து பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கிறது. தொழில்துறையினர் தங்கள் தொழில்துறையை மீண்டும் தொடங்குவதற்காக நோக்கங்கள், முன்னோக்கு மற்றும் நடைமுறை அணுகுமுறைகளை சேகரித்து பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்கவினால் திங்கட்கிழமை (15) கண்காட்சி சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் வரவேற்பு உரையை கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ சங்கத்தின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுற்றுலா ஆய்வுகளுக்கான ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் சுரங்க சில்வா நிகழ்த்தினார். சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இலங்கையில் முன்னோடி சுற்றுலாக் கல்வித் துறையை ஆரம்பித்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலைமையில் ஐ.நா.வின் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுக்கு இணையாக இந்த ஏற்பாடு நடைபெற்றது.

பயண முகவர்கள், சுற்றுலா நிர்வாகிகள் மற்றும் அனார்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள், சுற்றுலா இடங்கள் (செயல்பாட்டு வழங்குனர்கள் & ஏனைய பங்குதாரர்கள்), தொழில் மையம் - கற்றல், தொழில் மற்றும் முன்னோக்குகள் மற்றும் தொடர்புடைய சங்கங்கள் போன்றவற்றின் 60 கண்காட்சி கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.