22nd November 2021 14:29:45 Hours
பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் பேரவையின் செயலாளர் திரு நிகோலய் பட்ருஷேவ் உள்ளிட்ட குழுவினர் மூன்று நாள் பயணமாக இன்று (22) காலை இலங்கை வந்தடைந்தார். இவர்களை விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோர் வரவேற்றனர்.
இவ் விஜயத்தில் திரு நிகோலாய் பட்ருஷேவ் இன்று பிற்பகல் (22) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் (ஓய்வு) விரிவான கலந்துரையாடலைத் தொடர்வதற்கு முன்னர் ரஷ்ய தூதுக்குழு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை (22) சந்தித்தனர். பாதுகாப்பு அமைச்சின் கலந்துரையாடலின் முடிவில், விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக்களை பதிவிட்டார், அதனைத் தொடர்ந்து இச் சந்திப்பின் அடையாளமாக நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.
2008 ஆம் ஆண்டு முதல் திரு பட்ருஷேவ் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு பேரவையின் செயலாளராக இருந்து வருகிறார், இது தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அவரது முடிவுகளை செயல்படுத்தும் ஜனாதிபதியின் ஆலோசனை அமைப்பாகும்.