Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd November 2021 09:38:57 Hours

பங்களதேஷ் இராணுவத்தின் 50 வது இராணுவ தின கொண்டாட்டம்

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம் பெற்ற பங்களதேஷ் இராணுவத்தின் 50 வது இராணுவ தின கொண்டாட்ட நிகழ்வில் பங்களாதேஷ் இராணுவத்தின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

பங்களதேஷ் இராணுவத்தின் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் திகதி இராணுவ தினத்தை மிக விமர்சையாக கொண்டாடப்படுவதுடன், இந்த ஆண்டில் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர். இதற்கமைய இலங்கைக்கான பங்களதேஷ் உயர் ஸ்தானியான கௌரவ தாரிக் எம்டி அரிபுல் இஸ்லாம் அவர்களினால் ஆண்டு விழாவை முன்னிட்டு வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், பங்களதேஷ் உயர்ஸ்தானிகாரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர். அன்பான தாய்நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக பங்களதேஷ் இராணுவ படைகள் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த கொண்டாட்டத்துடனும், உற்சாகத்துடனும், புதிய வாக்குறுதியுடனும் இந்த நாளைக் கொண்டாடுகின்றன.

1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது, பங்களாதேஷ் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் துணிச்சலான படையினர்களின் அனைத்து பிரிவினர்களினதும் சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒன்றிணைந்த கட்டளையின் கீழ் ஆக்கிரமிப்புப் படை மீது முழுமூச்சுடன் தாக்குதல் நடத்தினர். அனைத்து முனைகளிலிருந்தும் தீர்க்கமான தாக்குதல்களில் விசாலமான தந்திரோபாய மற்றும் மூலோபாய நன்மையைக் கொண்டு வந்தன, இறுதியில் 1971 டிசம்பர் 16 போரில் வெற்றி பெற்றனர். அதனூடாக பங்களதேஷ் உலக வரைப்படத்தில் ஒரு சுதந்திரமான நாடாக உருவானது.