Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2021 06:40:58 Hours

மத்திய தளபதி அதிகாரி தொழில் வளர்ச்சி மையம் மற்றும் 121 வது பிரிகேட் தலைமையகத்திற்கு விஜயம்

மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, புத்தல அதிகாரி தொழிலாண்மை அபிவிருத்தி மையம் மற்றும் 121 வது பிரிகேட் தலைமையகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (16) 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவுடன் விஜயத்தினை மேற்கொண்டனர்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வருகை தந்த மத்திய பாதுகாப்பு தளபதி அதிகாரி தொழிலாண்மை அபிவிருத்தி மைய நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மறியாதையுடன் வரவேற்கப்பட்டார், இதன்பின் அவர் அதிகாரி தொழிலாண்மை அபிவிருத்தி மையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட , பிரதி தளபதி மற்றும் பிரதம பயிற்சி ஆலோசகர் ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.

இதன்பின், அதிகாரி தொழிலாண்மை அபிவிருத்தி மையத்தின் பாடத்திட்டம் மற்றும் 2020-2025 க்கான முன்னோக்கு வியுகம் சம்பந்தமாகவும் அதிகாரி தொழிலாண்மை அபிவிருத்தி மையத்தின் பாடத்திட்டம் குறித்தும் அதிகாரி தொழிலாண்மை அபிவிருத்தி மையத்தின் செயற்பாடுகள் மற்றும் கல்விப் பணிகள் குறித்து மாநாட்டு மண்டபம் கலந்துரையாடப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் தொழிலாண்மை அபிவிருத்தி மையத்தின் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார். விஜயத்தின் அடையாளமாக நாக மரக்கன்று ஒன்றையும் நாட்டினார். மேலும் அவர் புறப்படுவதற்கு முன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக்களையும் எண்ணங்களையும் பதிவிட்டார்

அதேவேளை மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, மொனராகலை, கும்புக்கனவில் உள்ள மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 121 வது பிரிகேடின் தலைமையகத்திற்கும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அது தொடர்பிலும் தெரிந்துக் கொண்டார்.

அதன் போது அவரை 121 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் உதய சேரசிங்க வரவேற்று பிரிகேட் வளாகத்திற்கு அழைத்துச் சென்றார். அதன் பின்னர், வருகை தந்த மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி தனது விஜயத்தில் பிரிகேட் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினருக்கான சகல வசதிகளையும் நேரில் பார்வையிட்டார்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் இந்த விஜயத்தின் போது 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.