Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2021 16:22:54 Hours

இராணுவத்தினரின் முயற்சியால் ஒட்டுச்சுட்டான் பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கல்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 641 வது மற்றும் 642 வது பிரிகேடின் ஒருங்கிணைப்புடன் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மூன்று பாடசாலை வளாகங்களில் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் பொறுத்தப்பட்டன.

அதன்படி, கூலாம்முறிப்பு அரச தமிழ்ப் பாடசாலை , கறிப்பட்டமுறிப்பு அரச தமிழ்க் கலவன் பாடசாலை, பழம்பாசி அரச தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகள் புதன்கிழமை (10) அந்தந்த இடங்களில் நடைபெற்ற விழாவின்போது குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பெற்றுக் கொண்டனர்.

பிரிகேட் படையினரின் வேண்டுகோளுக்கு பேரில் தேவையுள்ள பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கங்கள் பொருத்துவதற்கு நெசனல் பீவீசி கம்பெனி லிமிடெட் அனுசரணை வழங்கியது.

இத்திட்டத்தை முன்னெடுக்க, 641 வது மற்றும் 642 வது பிரிகேட்களின் படையினர் தங்கள் உதவியை வழங்கினர். மேலும் 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யு.பி.ஆர்.வீரகோன், 641 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக ஜயவர்தன, 642 வது பிரிகேட் தளபதி கேர்ணல் ஜி.டி.எஸ்.எம். அல்விஸ், மற்றும் 14 வது இலங்கை சிங்கப் படையணி, 23 வது விஜயபாகு படையணி மற்றும் 17 வது கஜபாகு படையணியின் ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

நேஷனல் பிவிசி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு.ரவி ஜோசப், நேஷனல் பி.வி.சி.யின் வர்த்தக முகாமையாளர் திரு. லலித் டயஸ், பிராந்திய முகாமையாளர்கள் (வடக்கு) திரு. மொஹமட் ரசாக் மற்றும் திரு. போஜய கசுன் மற்றும் நன்கொடையாளர்கள் ,அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள். மற்றும் மாணவர்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.