Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2021 11:40:58 Hours

ஜனாதிபதி பதவியின் 2வது வருடத்தில் சந்தஹிரு சேயவில் முதலாவது ‘சாங்கிக தானம்

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட 'சந்தஹிரு சேய தூபி' அதிமேதகு ஜனாதிபதியின் இரண்டாவது வருடகால நிகழ்வை முன்னிட்டு சங்ககத தக்ஷிணவா எனும் பௌத்த துறவிகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று (19) நன்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மத அனுஷ்டானங்களுக்கிடையில் பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கியதுடன் நேற்று முன்தினம் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் புனித ஜய ஸ்ரீ மஹா போதி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

முதல் பெண்மணியான அயோமா ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் திருமதி சித்ராணி குணரத்ன, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியாரான திருமதி சுஜீவா நெல்சன், கடற்படைத் தளபதி. விமானப்படைத் தளபதி, சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் பௌத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை படையினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திரன் சில்வா மகா சங்கத்தினர் தலைமையில் புனித தாது பேழை தான மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது.

அதன் பின்னர், அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி புத்த பூஜை மற்றும் சமய வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். பின்னர் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர், வருகை தந்த மகாசங்கத்தினருக்கு தானம்(பிரிகர) வழங்கியதை தொடர்ந்து புண்ணிய நீர் வார்த்தல் மற்றும் இறுதி புண்ணிய தர்ம போதணை ஆகியவற்றுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.

பீடங்களின் அனுநாயக்க தேரர்கள், அடமஸ்தனாதிபதி (எட்டு தூபிகளுக்குமா தலைமைத் தேரர் வண. பல்லேகம சிறினிவாசபிதான நாயக்க தேரர், வண. கலாநிதி கிரிந்தே அசாஜி நாயக்க தேரர் மற்றும் 150 பிக்குகள் அடங்கிய குழுவினர் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் உறவினர்களும் தான (பிங்கம) நிகழ்வில் கலந்து கொண்டனர்.