Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2021 10:00:31 Hours

ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி ருவன்வெலி மஹா சேயாவில் 'கிலான்பாசா'ஆசீர்வாத பூஜை

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடகால பூர்தியினை முன்னிட்டு மற்றும் நாட்டின் செழிப்புக்காக இன்று (19)ம் திகதி அனுராதபுரம் புனித ருவன்வெலி மகா சேயாவில் விசேட 'கிலான்பாச' மற்றும் 'ஆசீர்வாத பூஜை' மூன்று பீடங்களின் மகா நாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய தேரர்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.

மாலை 5.00 மணியளவில், அதிமேதகு ஜனாதிபதி அவரின் பாரியாருடன் இணைந்து, வந்து, விகாரை வளாகத்தில் உள்ள பிரதான விகாரை வளாகத்தினுள் சென்று, புத்தருக்கு மற்றும் தூபியின் கோபுரத்தில் சூடா மாணிக்கத்திற்கு வணக்கம் செலுத்தினார். இதனையடுத்து, விசேட ‘கப்ருக் பூஜை’ ஆரம்பிப்பதற்கு முன்னர், ருவன்வெலி மஹா சேயா தூபியின் நான்கு வளைவுகளுக்கு (வாஹல்கட) அருகாமையில் நான்கு மூலைகளிலும் தீபங்களை ஏற்றி வைத்தார். பின்னர் திம்புலகும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிமான அனு நாயக்க தேரர் வழமையான ஐந்து கட்டளைகளை (பன்சில்) வழங்கியிதனை தொடர்ந்து ருவன்வெலி மஹா சேயாவின் பிரதமகுருவும் நுவர கலைவிய பிரதம சங்க நாயக்கருமான கலாநிதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர் அறிமுக அனுஷ்டான நிகழ்வை ஆரம்பித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் அவரது பதவி ஆகியவற்றுக்கு ஹெவ்லொக் சிட்டி 'சாம விகாரையின் பிரதான அதிகாரியும் முன்னாள் உதவியாளருமான வென் அட்டபட்டுகந்தே ஆனந்த தேரர் தலைமையில் 'ஆசீர்வாத பூஜை’ கொழும்பு ஆனந்த கல்லூரியின் முன்னாள் உதவி அதிபரினால் 'செத்பிரித்' பராயணங்களுடன் ஆரம்பமானது. மல்வத்தை பீடத்தின் வண, திம்புலகும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிமான அநுநாயக்க தேரரும், வரலாற்று சிறப்புமிக்க வல்கம்பய ஸ்ரீ அபயராஜ ரஜமஹா விகாரையின் பிரதம அதிதியுமான வண, அபிதாஹனரோ தர்மகீர்த்தி சர் இரத்தினபால அபிதாஹனபால தேரர். அன்றைய நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த்துடன் இரங்கை அமரபுர மகா நிகாயாவின் மகா நாயக்கர் வண, தொடம்பஹல சந்திரசிறி மகா நாயக்க தேரர் மற்றும் வண, மகுலேவே ஸ்ரீ விமல மகா நாயக்க தேரர் ஆகியோர் இந்நிகழ்வில் விசேட சொற்பொழிவுகளை ஆற்றினர்.

மகா சங்க உறுப்பினர்களுக்கு 'பிரிகர தானம் வழங்குதல் மற்றும் துட்டுகெமுனு மன்னன் மற்றும் ராணி விஹார மகா தேவி ஆகியோரின் சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதன் மூலம் அன்றைய தின 'பிங்காமா' தான நிகழ்வு நிறைவடைந்தது.

முதல் பெண்மணியான, திருமதி அயோமா ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர், சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) மற்றும் அவரது மனைவி திருமதி சித்ராணி குணரத்ன, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது மனைவி இராணுவ சேவை வனிதா பிரிவின் தலைவர் திருமதி சுஜீவா நெல்சன், கடற்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி, விமானப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி, சிவில் பாதுகாப்புத் படைப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பக்தர்கள் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.