Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2021 13:30:19 Hours

முல்லைத்தீவு தளபதியின் உத்தியோகபூர்வ விஜயங்கள்

முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் முல்லைத்தீவு தளபதியாக பதவியேற்ற பின்னர் நவம்பர் மாதம் 12 - 13 ஆம் திகதிகளில் பூனகரி 66 வது படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை அலகுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டார்.

வருகை தந்த முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக தளபதிக்கு 66 வது படைப்பிரிவின் நுழைவாயிலில் 20 வது (தொண்) இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்களால் பாதுகாப்பு அறிக்கையிடல் மறியாதை அளிக்கப்பட்டது, மேலும் 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அன்புடன் வரவேற்றதுடன் பின்னர், முல்லைத்தீவு தலைமையக தளபதியிடம், தமது படைப்பிரிவின் கடமைகள் மற்றும் பணிகள் தொடர்பான விளக்கமொன்றை வழங்கினார்.

66 வது படைப்பிரிவிற்க்கு விஜயம் செய்த மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 66 வது படைப்பிரிவின் கீழுள்ள அனைத்து பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் மரக்கன்றுகளை நாட்டியதுடன் நினைவுகளுக்காக குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

இதன் பின்னர், அருகில் உள்ள 661 வது பிரிகேட் தலைமையகத்திற்கு விஜயம் செய்த தளபதியை 661 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் தீப்த ஆரியசேன அவர்கள் வரவேற்றார். மேலும், அவர் 662 வது பிரிகேட் தலைமையகத்திற்கும் விஜயம் செய்தார், அங்கு அவரை 662 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமிந்த தயாவன்ச வரவேற்றார். 663 வது பிரிகேடிற்கு சென்ற போது அதன் தளபதி பிரிகேடியர் பிரியஞ்சித் ஹென்னாடிகே அவர்கள் வரவேற்றார்.

அவரது இரண்டு நாள் விஜயத்தின் இறுதிப் பகுதியாக, 5 வது (தொண்) இயந்திரவியல் காலாட் படையணி, 20 வது (தொண்) விஜயபாகு காலாட் படையணி மற்றும் ஆணையிறவில் உள்ள கோப்ரல் காமினி குலரத்ன நினைவுச்சின்னம் என்பவற்றிக்கும் விஜயம் செய்தார்.