Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2021 10:02:03 Hours

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வல்லுநர்கள், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் சட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு

கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிராந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் கொழும்பு பிரதிநிதி பிரிகேடியர் ஜாக்குயிஸ் லெமேய் (ஓய்வு) மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிராந்திய இராணுவ மற்றும் பாதுகாப்புப் படைகளின் திட்ட ஆலோசகர் திரு சன்ன ஜயவர்தன ஆகியோர் மனிதவள பணிப்பாளர் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்புடன் அதிகாரிகளின் அறிவை விரிவுபடுத்தும் வகையில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்தனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கோட்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் இலங்கையின் செயல்பாடுகள், சர்வதேச சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்க்கு மாறுதல், மனித உரிமைகள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரங்கள், அடிப்படைக் கோட்பாடுகள் போன்ற பல்வகைப் விடயங்கள் வெவ்வேறு பகுதிகளிலுள்ள அவர்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடைவெளிகளைக் குறைக்கவும். கைது, தடுத்தல் மற்றும் தேடுதல், கைப்பற்றல், பலாத்காரம் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம், என்ற வழக்கு ஆய்வுகள் மற்றும் குழு கலந்துரையாடல்கள் போன்றவை நவம்பர் மாதம் 16-17 திகதிகளில் பனாகொடவில் உள்ள இலங்கை காலாட்படை படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

மேற்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, முன்னோக்கு வியூகம்-2020-2025' க்கு அமைவாக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இந்நிகழ்வு சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, 58 வது படைப்பிரிவின் அதிகாரிகள் உட்பட மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 32 அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் இறுதியில் விரிவுரையாளர்களுக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.