Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2021 16:43:12 Hours

‘சந்தஹிரு சேய’ இராணுவ வீரர்களின் அழியாத நினைவுச்சின்னமாக மகா சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

போர்களில் உயிர் தியாகம் செய்த இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் வீரர்களின் அழியாத நினைவு சின்னமாகவும் விலைமதிப்பற்றதாகவும் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த தூபியான சந்தஹிரு சேயா அனுராதபுரத்தில் இன்று (18) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. மேலும் சந்தஹிரு சேயா போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கான நினைவுச் சின்னமாகப் கருதப்படுவதுடன், 'சாசனம்' மற்றும் மகா சங்கத்தினரிடம் கௌரவமான முறையில் ஒப்படைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மரணமடைந்த போர்வீரர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகள், நிரந்தரமாக ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

30 வருடகால பயங்கரவாதத்தை ஒழித்த முன்னாள் ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து 801 அடி சுற்றளவைக் கொண்ட 282 அடி உயரமான பிரமாண்டமான தூபியின் முதல் கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்தனர்

மேலும் அண்மைக் காலங்களில், ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில் தூபியின் அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து, இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களப் வீரர்கள், இந்தத் திட்டத்திற்கு முதன்மையானவர்கள் என்ற வகையில் மிகுந்த மரியாதை செலுத்தி, பக்தர்களின் தாராள ஆதரவுடன் இந்த பிரம்மாண்டமான தூபியை அமைக்க இரவும் பகலும் வியர்வை சிந்தினர். இறுதியில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இத்திட்டத்தை முன்னெடுத்து மகத்தான வெற்றியை கொண்டு சேர்த்தனர்

நாட்டில் பௌத்த மரபின் மறுமலர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தை முன்வைக்கும் இன்றைய முக்கிய ஆரம்ப நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி, முதல் பெண்மணி, பிரதமர் மற்றும் அவர் தம் பாரியாரின் வருகைக்கு பின்னர் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் திருமதி குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவா நெல்சன், கடற்படை தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் வரவேற்பின் பேரில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சம்பிரதாய திறப்பு விழா நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்யதனர்.

மகா சங்க உறுப்பினர்களின் ஜயபிரித் பாராணங்கள் மற்றும் பறை இசைகளுக்கு மத்தியில் தூபியின் கலசம் திரைநிக்கம் செய்யப்பட்டதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர்கள், போர்வீரர்களின் பிள்ளைகள் மற்றும் நிரந்தரமாக ஊனமுற்ற போர்வீரர் ஆகியோரின் உறவினர்கள் புத்த சாசன நம்பிக்கையின் சடங்கு மரபுகளுக்கு அமைவாக புஷ்பாஞ்சலி மற்றும் இதர சடங்குகளுக்கு அழைக்கப்பட்டனர்.

மேற்படி பிரதிநிதிகளுடன் பௌத்த பீடங்களின் பீடாதிபதிகள், புதிய தூபி வளாகத்திலுள்ள புதிய புத்தர் சந்நிதிக்கு மலர் மற்றும் நறுமன தூப பூஜை செய்தனர் பின்னர் தாது பேழைக்கு நகை ஆபரணங்களை அணிவித்தனர் பின்னர் ஜனாதிபதி நித்திய கல் விளக்கை ஏற்றி வைத்தார்.

பிறகு நடந்த சுருக்கமான தர்ம போதணைகளின் போது வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் ஆத்மா சாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு பாதுகாப்புச் செயலாளரால், இத்திட்டம் முடிவடைந்தமைக்கான சம்பிரதாய பூர்வமான அறிவிப்பை (சன்னாச) ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அதனை ஜனாதிபதியால் மகாசங்கத்தின் தலைமை பிக்குவிடம் ஜனாதிபதி மரியாதையுடன் வழங்கி வைத்து புனித தூபி வளாகத்திற்குள் 'சாசன' பூஜைகளை நடாத்துமாறு வேண்டிக் கொண்டார்.

மேலும் இலங்கையின் புதிய தூபி'க்கான முதல் கிலான்பச பூஜை' மகா சங்கத்தினர் நடத்தினர். இதன் போது முதல் பெண்மணி, கௌரவ பிரதமரின் துணைவியார், மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் துணைவியார், மற்றும் இராணுவம், கடற்படை தளபதி, விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் இத்திட்டத்தின் கட்டளை அதிகாரி கேணல் கே எஸ் மோகன் குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மல்வத்தை பீடத்தின் உப பீடாதிபதி அதி வண. கலாநிதி நியங்கொட விஜிதசிறி அனு நாயக்க தேரர், அஸ்கிரிய பீடத்தின் உப பீடாதிபதி அதி வண, வெண்டருவே ஸ்ரீ ரத்னபால அனு நாயக்க தேரர் மற்றும் அதி வண. கலாநிதி பல்லேகம ஸ்ரீ நிவாசபிதான நாயக்க தேரர் ஆகியோரால் மூன்று புத்த பிரசங்கங்கள் (அனுஷாசன) பின்னர் வழங்கப்பட்டது. மேலும் எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான விகாரதிபதி (அடமஸ்தானாதிபதி) இந்த பிரம்மாண்டமான தூபியை நிர்மாணிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர் , நாட்டு மக்களின் ஆன்மீக நலனுக்காக நமது கடந்த கால அரசகுலத்தின் சிறந்த படைப்புகளை நினைவூட்டும் வண்ணம் இத்திட்டம் அமையும்.

2010 ஆம் ஆண்டு இந்த பிரமாண்டமான தூபியை நிர்மான திட்டத்தை முன்னெடுத்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஒருங்கிணைத்து இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் நாளான 2010 ஆம் ஆண்டு (நவம்பர் 18 ) பிறந்த தினத்தில் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இதன் பின்பு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உறையாற்றுவதற்காக அழைக்கப்பட்டார்

இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதற்கான முயற்சிகளை பாராட்டிய மகா சங்க உறுப்பினர்கள், பிரதமர் உரையாற்றிய சில நிமிடங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவருக்கும் நினைவுச் சின்னங்களை வழங்கி நன்றியை தெரிவித்தனர்.

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் வீரர்கள் மற்றும் திட்டத்தின் கட்டளை அதிகாரி கேணல் கே.எஸ். மோகன் குமார் ஆகியோரின் அயராத அர்ப்பணிப்புக்கான தனது பாராட்டு மற்றும் அங்கீகாரத்திற்காக ஜனாதிபதி நினைவுச்சின்னங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தூபி' நிர்மாணத்தின் பல்வேறு கட்டங்களை விளக்கும் சித்திரப் புத்தகத்தின் முதல் பிரதியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வழங்கி வரலாற்று நிகழ்வுக்கு மேலும் கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் அளித்தார். மேலும் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து இந்நிகழ்வுகள் அனைத்தும் நிறைவிற்கு வந்தன.

தூபி மற்றும் வளாகத்தின் மின்விளக்குகள் பின்னர் மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஔிரூட்டப்பட்டது.