Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2021 14:27:56 Hours

படையினர் மற்றும் சிலர் இணைந்து பதுளையில் ‘டெங்கு’ தடுப்பு நடவடிக்கையில்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது பிரிகேட் படையினர் மற்றும் 10 அரச நிறுவனங்களின் தொண்டர்கள் இணைந்து மாபெரும் ‘டெங்கு’ தடுப்பு சமூகப் பணியொன்று பதுளை மாவட்டச் செயலகச் சுற்றுப்புறத்தில் செவ்வாய்க்கிழமை (16) முன்னெடுத்தனர் இத் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு படையினரோடு ,ஆளுனர் அலுவலகம், மாநகர சபை, பல்செயல்பாடு அபிவிருத்தி உறுப்பினர்கள், பதுளை பொலிஸ் நிலையத்தின் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பதுளை தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் படையினருடன் இணைந்து சிரமதான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

இத்திட்டம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டது.