Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2021 11:27:56 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு 9வது பிறந்தநாள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 நவம்பர் 2012 அன்று தலைமையகத்தின் 9 ஆவது ஆண்டுபூர்த்தி தின நிகழ்வை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு திங்கட்கிழமை (15) படையினருக்கான சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் நாட்டின் மேற்கு, வட மேற்கு, சபரகமுவ மாவட்டங்களிலுள்ள 9 மாவட்டங்களில் காணப்படும் 14 மற்றும் 61 வது படைப்பிரிவுகளின் பகுதிகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. அத்தோடு தென் மாகாணத்தில் உள்ள பல்வேறு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களில் மேற்கு தலைமையம் ஈடுபடுகின்ற அதேவேளை அதன் ஆண்டு நிறைவு விழா மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் ஆண்டு நிறைவு தினத்தில் தளபதிக்கு வரவேற்பளித்ததை தொடர்ந்து கேணல் பொதுப்பணி கேணல் பி.எம்.ஏ.பாலசூரிய அவர்களால் தளபதி பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது படையினருக்கான உரையொன்றை நிகழ்த்திய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான போராட்டத்தின் படையினரின் வகிபாகம் மற்றும் அவசர நிலைமைகளின் போதான செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

அன்றைய தினம் மாலை வேளையில் பனாகொட ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் போதி பூஜை இடம்பெற்றதுடன் படையினருக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.