Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2021 15:27:56 Hours

652 வது பிரிகேட் படையினரின் சொந்த நிதி மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் மேலுமொரு வீடு நிர்மாணிப்பு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் 652 வது பிரிகேடின் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரின் சமூக பணிகளை விரிவுபடுத்தும் முகமாக கிடாபிடிச்சிக்குளம், நட்டான்கண்டல் பிரதேசத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை (15) கையளிக்கப்பட்டது.

வறுமையில் வாடும் பயனாளியான திருமதி ஜெகந்தி லியனகே நிலங்க என்னும் குழந்தைகளுடன் வசிக்கும் தாயாருக்கு இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான உதவிகளை 652 வது பிரிகேடினரும் திருமதி தேவிகா எதிரிசிங்க மற்றும் திருமதி ஹாஷினி குமாரகே உட்பட சில நன்கொடையாளர்களும் இணைந்து வழங்கினர்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் 652 வது பிரிகேடின் சமூகப் பணிகளில் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது, 65 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி வழிகாட்டுதலின்படி நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, 652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஞ்சீவ வனசேகர அவர்களினால் மேற்பார்வை செய்யப்பட்டது.

மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி மற்றும் பிரிகேடியர் சஞ்சீவ வனசேகர, 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின் கட்டளை அதிகாரி மேஜர் டீஎஸ் சூரியஆராச்சி மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.