17th November 2021 10:00:21 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள 652 வது பிரிகேடின் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் மல்லாவி பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய குடும்ப சிறுவர்களின் பாடசாலைக் கல்வியின் முன்னேற்றத்திற்கான உதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி தெற்கிலுள்ள நன்கொடையால் ஒருவரின் உதவியுடன் திங்கட்கிழமை (15) மேற்படி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இத்திட்டமானது எரவ்வள பிரதேசத்தை சேர்ந்த திருமதி பிரியங்கா பிரியதர்ஷினி அவர்களினால் படையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க வறுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதிகளவில் கல்வி பயிலும் அம்பால்புரம் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் போது பயிற்சி புத்தகங்கள், உபகரணங்கள், பேனைகள் மற்றும் பென்சில்கள் ஏ4 தாள்கள் என்பனவும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் 65 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 652 வது பிரிகேட் தளபதி ஆகியோருடன் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.